ஹரியானாவின் சோனிபட்டில் 1998 ஜூன் 7 அன்று பிறந்த சுமித் அண்டில், பாரா தடகள உலகில் உத்வே கத்தின் அடையாளமாக மாறியுள்ளார். பாரீஸ் 2024 பாராலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் F64 பிரிவில் போட்டியிட்ட சுமித், தங்கம் வென்றதன் மூலம் தனது திறனையும் உறுதியையும் மீண்டும் வெளிப்படுத்தி யுள்ளார். இதனால், உலகின் முதன்மையான பாரா-தடகள வீரர்களில் ஒருவராக தனது நிலையை வலுப்படுத்தினார். ஆரம்ப கால வாழ்க்கை மற்றும்
சவால்கள்
ஒரு பயிற்சி வகுப்பிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் நிகழ்ந்த விபத்துக்குப் பிறகு சுமித்தின் வாழ்க்கையில் கடுமை யான திருப்பம் ஏற்பட்டது. சோனி பட்டைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய மல்யுத்த வீரரான இவர், விபத்தில் தனது ஒரு காலை இழந்தார். இது அவரது தடகள வாழ்க்கையை முடித்திருக்கக் கூடிய ஒரு பெரும் பாதிப்பாக அமைந்தா லும், சுமித்தின் அசைக்க முடியாத உறுதி, இந்த பின்னடைவிலிருந்து அவர் விரைவாக மீண்டு வர உத வியது. இந்திய விமானப் படை யில் பணியாற்றிய தனது தந்தை யின் ஆதரவுடன், சுமித் ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவரது இடது கீழ் மூட்டில் ஒரு செயற்கை கால் பொருத்தப்பட்டது. ஆரம்பத்தில், செயற்கை உறுப்பு கொண்ட வாழ்க்கைக்கு மாறுவது சவாலாக இருந்தது. இளம் வீரரான இவர், வலி மற்றும் இழப்பு உணர்வுகளுடன் போராடி னார். ஆனால், சுமித் தனது கிராமத்தைச் சேர்ந்த பாரா தடகள வீரரான ராஜ்குமாரை சந்தித்தபோது, அவர் பாரா விளையாட்டு உல கிற்கு சுமித் அண்டிலை அறிமுகப்படுத்தி னார். சுமித்துக்குள் இருந்த உணர்வை மீண்டும் தூண்டினார். அவரது குடும்பத்தி னர் மற்றும் நண்பர்களின் அசைக்க முடி யாத ஆதரவுடன், சுமித் புதிய பாதையில் தன்னை அர்ப்பணித்தார். தினசரி பயிற்சி மற்றும் சுய முன்னேற்றத்திற்கு இடைவிடா மல் போராடினார்.
ஈடு இணையற்ற சாதனை
தொடர்ச்சியான அசாதாரண வெற்றிகள், பாரா தடகளத்தில் சுமித் அண்டிலின் பய ணத்தை அடையாளப்படுத்தியுள்ளன. டோக் கியோ 2020 பாராலிம்பிக் போட்டிகளில், அவர் ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இது அவர் மீது உல களாவிய கவனத்தை ஈர்த்தது. சீனாவின் ஹாங்சோவில் நடந்த 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 73.29 மீட்டர் தூரம் எறிந்து, உலக சாதனையை முறி யடித்தார். அவரது ஆதிக்கம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் வரை தொடர்ந்தது. அங்கு அவர் தங்கப் பதக்கங்களை வென்றார். இது. சிறந்த பாரா-விளையாட்டு வீரர்களில் ஒருவ ராக அவரது நற்பெயரை மேலும் உறுதிப் படுத்தியது. வெளிநாடுகளில் பயிற்சி அவரது திறனை உணர்ந்து, ஒலிம்பிக் போடியம் இலக்கு திட்டம் (TOPS) போன்ற முயற்சிகள் மூலம், விரிவான உதவிகள் கிடைத்தன. இதனால் சிறப்பு ஈட்டிகள் மற்றும் செயற்கை உறுப்புகளை வாங்க முடிந்ததோடு நிபுணத்துவ பயிற்சியும் அவருக்கு கிடைத்தது. கூடுதலாக பிரான்ஸ், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மேற் கொண்ட பயணங்களின் மூலம் சுமித் பயன டைந்தார். இவை, அவரது திறன்களை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றின. சோனி பட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணை யத்தில் (சாய்) பெற்ற தொடர்ச்சியான பயிற்சி களும் அவருக்கு நன்கு உதவின.
அங்கீகாரம் மற்றும் புதிய பாதை
2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி களில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அனைத்து தரப்பினரிடமிருந்தும் சுமித் அண்டில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். சுமித்தின் கதை - வலிமை, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத மனித உணர்வு ஆகியவற்றில் ஒன்றாகும். விபத்திலிருந்து பாராலிம்பிக் சாம்பிய னாக மாறுவதற்கான அவரது பயணம், இந்தி யாவிலும் உலகெங்கிலும் எண்ணற்ற நபர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. பாரா-தடகளத்தில் சாத்தியமான எல்லைகளை அவர் தொடர்ந்து தகர்த்தெறிவதால், சுமித் அண்டிலின் செயல்பாடு சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்கால தலைமுறை விளை யாட்டு வீரர்களை பெரிய கனவு காணவும், அவர்களின் பாதையில் உள்ள எந்தவொரு தடையையும் சமாளிக்கவும் ஊக்குவிக்கும் என்பது உறுதி.