ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன். இவர் நீச்சல் உலகில் பிரபலமானவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கியுள்ள இவர் 7 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற பின்லாந்து ஒலிம்பிக் தொடரில் கிறிஸ்டின் ஓட்டோ மற்றும் 2008-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் நடேலி ஆகிய நீச்சல் வீராங்கனைகள் 6 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. இதனை எம்மா மெக்கியோன் தற்போது முறியடித்துள்ளார்.
50 மீ, 100 மீ, 4x100 மீ ஆகிய பிரீஸ்டைல் - 3 தங்கம்
4x100 மீ மெடலி - 1 தங்கம்
100 மீ பட்டர்பிளை - 1 வெண்கலம்
4x200 மீ பிரீஸ்டைல் - 1 வெண்கலம்
4x100 மீ மெடலி - 1 வெண்கலம்
மொத்தம் 7 பதக்கம் வென்று அசத்தியுள்ளார்