games

img

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்..... இறுதியில் இந்திய வீராங்கனை பவினாபென்....

மாற்றுத் திறனாளிகளுக்கான (பாராலிம்பிக்) 16-வது ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

\இந்த தொடரின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீராங்கனை பவினாபென் தனது அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் ஜங் மியாவை எதிர்கொண்டார். 5 செட்கள் வரை நகர்ந்த இந்த ஆட்டத்தில் பவினாபென் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் பவினாபென் சீன வீராங்கனை ஜவ்யிங்கை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிறன்று காலை 7:15 மணிக்கு நடைபெறுகிறது. டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் குறைந்தபட்சம் தங்கம்அல்லது வெள்ளி என இரண்டில் ஒரு பதக்கம் இந்தியாவுக்கு கிடைப்பது உறுதியாகிவிட்டது.