games

img

ஒலிம்பிக் ஹாக்கி... அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி...

பெரும்பாலான நட்சத்திரவிளையாட்டுகளில் இந்திய வீரர் - வீராங்கனைகளின் செயல்பாடுகள் சொதப்பலாகவே அமைந்த நிலையில்,  தங்கப்பதக்கம் நிச்சயம் கிடைக்கும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது  ஹாக்கி பிரிவில் தான். இதற்கு காரணம் இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் நம்பிக்கை யான ஆட்டம் தான். எப்படியும் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும்  தங்க கனவை இந்திய ஆடவர் அணி வெடி வைத்து தகர்த்துள்ளது.  

செவ்வாயன்று நடைபெற்ற  அரையிறுதி ஆட்டத்தில் ஹாக்கி ஆடவர் அணி பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது.முதல் கால்பாதியில் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலையில் இருந்தது. மூன்றாம் கால்பகுதி வரை இரு அணிகளும் 2-2  என்றகோல் கணக்கில் சமனில் விளையாடி கொண்டிருந்தனர்.  கடைசி கால்பகுதியில் பெல்ஜியம் அணி திடீரெனஅதிரடியில் களமிறங்கி அடுத்த டுத்து 3 கோலடிக்க இந்திய வீரர்கள்அதிர்ச்சியில் உறைந்தனர். அதன் பின்இந்திய அணி வீரர்கள் கோலடிக்க கடுமையாக போராடியும் பதிலுக்கு கோலடிக்க முடியவில்லை. இறுதியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.   

வெண்கலம் கிடைக்குமா?  

இரண்டாவது அரையிறுதியில் தோல்விகண்ட ஜெர்மனியுடன் இந்திய அணி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது.