மகளிர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவிடம் தோல்வியை தழுவி இறுதி ஆட்டத்திற்கான வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தோல்வி யடைந்த இந்திய அணி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன்அணியை எதிர்கொள்கிறது. இந்தஆட்டம் இந்திய நேரப்படி வெள்ளியன்று (ஆக.6) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய அணி கடைசி யாக 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் தொடரில் 4-வது இடம் பிடித்தது. அதன் பின்பு பெரியளவில் சோபிக்கவில்லை. டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 49 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறி வெண்கலப் பதக்கம்வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. முதன்முறையாக ஒலிம்பிக் தொடரில்பதக்கம் பெற்று புதிய வரலாறு படைக்குமா? என்ற ஆவலுடன் ரசிகர்கள் போட்டியை எதிர்பார்த்து உள்ளனர்.