games

img

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் 2 பதக்கம்....

மல்யுத்த வீரர் ரவிக்குமாருக்கு வெள்ளி

ஆடவர் 57 கிலோ மல்யுத்த பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் ரஷ்ய வீரர் ஜாவுரிடம் 4-7 என்ற புள்ளிகணக்கில் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.  இதன் மூலம் இந்தியாவிற்கு டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 2-வது வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

                               ********

ஹாக்கி ஆடவர் அணிக்கு வெண்கலம்

ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.  

ஒலிம்பிக் தொடர்பான கூடுதல் செய்திகளுக்கு 8-ஆம் பக்கம் பார்க்க...