பிரெஞ்சு ஒபன் பட்டம் வென்ற ரஃபேல் நடால், காயம் காரணமாக விம்பிள்டன் தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாரிசில் ஞாயிறன்று நடைபெற்ற பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பங்கேற்ற ரஃபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 14-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பாதத்தில் ஏற்பட்ட காயத்துடனேயே பிரெஞ்சு ஒபன் தொடரில் நடால் பங்கேற்ற நிலையில், புதிய சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதில் உரிய பலன் கிடைக்காத நிலையில், நடலுக்குப் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனால், அவர் வருகிற 27 ஆம் தேதி தொடங்கும் விம்பிள்டன் தொடரில் நடால் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.