games

img

மகத்தான சாதனையாளரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது - நடாலுக்கு ரோஜர் பெடரர் வாழ்த்து

கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற நடாலுக்குப் பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் (35), ரஷ்யாவின் மெத்வதேவை இறுதிச்சுற்றில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார். இதன் மூலம்  ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை நடால் நிகழ்த்தி உள்ளார். மேலும், டென்னிஸ் வரலாற்றில் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரா் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.  

இந்நிலையில் நடாலின் இந்த வெற்றிக்கு அவரின் சக போட்டியாளரான  ஃபெடரர்  பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து, ரோஜர் பெடரர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தியில், “சிறந்த போட்டி! 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் ஆடவர் என்கிற சாதனைக்காக என்னுடைய நண்பரும், சிறந்த போட்டியாளராருமான நடாலுக்குப் பாராட்டுகள். மகத்தான சாதனையாளரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. உங்களுடைய வேலை ஒழுங்கு, அர்ப்பணிப்பு, போராடும் குணம் போன்றவை எனக்கும் பலருக்கும் ஊக்கமாக உள்ளன. கடந்த 18 வருடங்களாக என்னை நீங்கள் மேலும் சாதிக்க அழுத்தம் தருவது போல நானும் உங்களுக்கு அப்படி இருப்பதற்காகப் பெருமையடைகிறேன். இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவீர்கள் என்பதில் உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.