அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சப்லென்கா
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ் லாம் போட்டியான அமெ ரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று அதி காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முத லிடத்தில் உள்ள பெலராசின் சபலென்கா, தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள உள்ளூர் வீராங்கனையான அனீஸி மோவா பலப்பரீட்சை நடத்தினர். நடப்பு சாம்பியனான சப்லென்கா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்துடன் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். குறிப்பாக சப்லென்காவுக்கு இது 4ஆவது கிராண்ட்ஸ்லாம் (2024, 2025 - அமெரிக்கா) பட்டம் ஆகும். இதற்கு முன் இதற்கு முன் 2023, 2024ஆம் ஆண்டு களில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றி இருந்தார். அதே போல ஒரே ஆண்டில் தொடர்ந்து 2ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் கோப்பை யை நழுவவிட்டுள்ளார் அமெரிக்காவின் அனீஸிமோவா. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் ஓபன் டென் னிஸ் தொடரில் அனீஸிமோவா, போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்கிடம் கோப்பையை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.44 கோடி அள்ளிய சப்லென்கா
சாம்பியன் பட்டம் வென்ற சப்லென்கா ரூ.44 கோடி பரிசுத்தொகையை அள்ளி யுள்ளார். அதே போல இரண்டாம் பிடித்த அனீஸிமோவா ரூ.22 கோடி யும் பரிசுத்தொகையை வென்றார். அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட்ஸ் சுற்றுகளில் வெளியேறியவர்க ளுக்கும் குறிப்பிட்ட அளவு பரி சுத்தொகை வழங்கப்பட்டது.
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போர்ச்சுக்கல் அபார வெற்றி
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 3 நாடுகளில் கூட்டாக அடுத்தாண்டு (2026 - ஜூன்,ஜூலை) 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகளுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவ தும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செப்., 6ஆம் தேதி நடைபெற்ற ஐரோப்ப்பா கண்டத்திற் கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ரொனால் டோவின் போர்ச்சுக்கல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அர்மேனியா அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 40 வயதான போர்ச்சுக்கல் கேப்டன் ரொ னால்டோ 2 கோல்கள் அடித்தார். அதே போல ஜாவோ பெலிக்ஸ் 2 கோல்க ளும், ஜாவோ கேன்சிலோ ஒரு கோலும் அடித்து அணியின் வெற்றிக்குஉதவினர்.
பாகிஸ்தானில் கொடூரம் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பஹ்துன்ஹ்வா மாகாணத்தில் உள்ளது கவுசர் கிரிக்கெட் மைதானம். இந்த மைதானத்தில் சனிக்கிழமை அன்று உள்ளூர் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் வீரரா? பார்வையாளரா? எனது தெரியவில்லை. பலர் படுகாயத்துடன் பஜௌர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும்,”இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது” என பஜௌர் மாவட்ட காவல்துறை அதிகாரி வகாஸ் ரபீக் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மைதா னத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள சம்பவம் விளையாட்டு உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.