மெல்போர்ன்
கிரண்ட்ஸாலம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் ஆளாக இறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் ரஷ்யாவின் காரஸ்டேவ்வை 6-3,6-4,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் நபர் ஜேகோவிச்சுடன் இறுதிக்கு முன்னேறுவர். 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மெத்வதேவ், கிரீஸின் சிட்ஸிபாஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் ஒசாகா, அமெரிக்காவின் பிரடி ஆகியோர் இறுதிக்கு முன்னேறினர்.இந்த பிரிவில் இறுதியாட்டம் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.