உலக தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜுக்கு ஆண்டின் சிறந்த பெண் விருது வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜு 2003ல் பாரிஸில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து இந்தியத் தடகள சம்மேளனத்தில் துணைத் தலைவராக உள்ளார். மேலும் தன்னுடைய அகாடெமி மூலமாக பல இளம் விளையாட்டு வீராங்கனைகளை கண்டறிந்து, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளார். உலக தடகள அமைப்பு அஞ்சு பாபி ஜார்ஜின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2021 ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக அவரைத் தேர்வு செய்துள்ளது. மேலும் அவர் தனது முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு நன்றி என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.