games

img

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: வெண்கலம் வென்ற இந்தியா அணி  

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் வென்றது.    

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியை இந்திய அணி மூன்று முறை வென்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு முதல் முறையாக களம் கண்ட பிரதான போட்டியில் அரையிறுதியில் ஜப்பானிடம் இந்திய அணி தோற்றது. முன்னதாக லீக் ஆட்டத்தின்போது இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு அரையிறுதியில் ஜப்பான் பதிலடி கொடுத்தது.  மேலும் 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வென்று இறுதிச்சுற்றுக்கு ஜப்பான் முன்னேறியது.  

அதனைதொடர்ந்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் வங்கதேச தலைநகர் டாக்கா என்ற இடத்தில் மோதின. இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. பிறகு 2-2 என ஆனது. இதன்பிறகு இரு கோல்கள் அடித்து இந்திய அணி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் ஒரு கோல் அடித்தாலும் இந்திய அணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. இந்திய அணிக்கு 11 பெனால்டி கார்னர்கள் கிடைத்தும் அவற்றிலிருந்து 2 கோல்கள் மட்டுமே கிடைத்தன.