games

img

ஜுவெண்டஸ் அணிக்கு தாவுகிறார் போக்பா?

பிரான்ஸ் கால்பந்து அணியின் நடுகள வீரரும், பிரிட்டன் கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட்  அணியின் நட்சத்திர வீரருமான பால் போக்பா (30) இத்தாலி  நாட்டின் பிரபல கிளப் தொடரான “சீரி ஏ” தொடரில் 4 ஆண்டு கால ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. மேலும்  அந்த தொடரில் நட்சத்திர அணியாக உள்ள ஜுவெண்டஸ் அணியில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  பிரான்ஸ் நாட்டின் கிளப் அணியான பாரிஸ் செயின்ட்  ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியும் போக்பாவை தங்கள்பக்கம்  கொண்டு வர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.  மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஒப்பந்தத்தை பால் போக்பா முடித்துக்கொண்டதாக அந்த அணி நிர்வாகம் வெளிப்படையாக ஏற்கெனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.