games

img

யூரோ கோப்பை கால்பந்து... மைதானத்தில் சரிந்து விழுந்த டென்மார்க் வீரர் எரிக்சென் கவலைக்கிடம்...   

கோபன்ஹேகன்
உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்த மிகப்பெரிய கால்பந்து தொடரான  ஐரோப்பிய கால்பந்து கோப்பை (யூரோ கோப்பை) தொடரின் 16-வது எடிசன் நேற்று தொடங்கியது. 

தொடக்க ஆட்டத்தில் இத்தாலி அணி 3-0 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்திய நிலையில், இன்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் வேல்ஸ் - சுவிஸ் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 2-வது ஆட்டத்தில் டென்மார்க் - பின்லாந்து அணிகள் மோதின. 

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையும் தருணத்தில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் திடிரென மைதானத்தில் சரிந்து விழுந்தார். மைதான முதலுதவி பலனிளிக்காத நிலையில், மேல் சிகிச்சைக்காக கோபன்ஹேகன் நகரின் முக்கிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  

 கிறிஸ்டியன் எரிக்சென் ஏன் மைதானத்தில் சரிந்து விழுந்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் மைதான முதலுதவி சிகிச்சையிலேயே அவர் கவலைக்கிடமான நிலையில் தான் இருந்தார். அவரை சுற்றி டென்மார்க் வீரர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து கதறி துடித்தனர். ரசிகர்கள் கண்ணீருடன் ஏங்கி ஏங்கி அழுதனர். பின்லாந்து வீரர்கள் என்ன நடக்கிறது தெரியாமல் சோகமாக கிறிஸ்டியன் எரிக்செனின் முதலுதவி சிகிச்சையை பார்த்துக்கொண்டிருந்தனர். 

கிறிஸ்டியன் எரிக்சென் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் டென்மார்க் - பின்லாந்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.  

படம்  : சிவப்பு வெள்ளை ஜெர்சியில் இருப்பவர் எரிக்சென்