games

img

விளையாட்டு

9ஆவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற பிரேசில் 4ஆவது முறையாக கோப்பையை நழுவவிட்ட கொலம்பியா

கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து தொடரின் 10ஆவது சீசன் ஈகுவடார் நாட்டில் நடை பெற்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில்  - கொலம்பியா அணிகள் ஞாயிறன்று பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், முழு  ஆட்டநேர முடிவில் (90ஆவது நிமிடம்)  3-3 என்ற கோல் கணக்கில் இரு அணி களும் சரிசம அளவில் இருந்தன. இதனால் கூடுதல் நிமிடம் கடை பிடிக்கப்பட்டது. கூடுதல் நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல டிக்க ஆட்டம் மீண்டும் சமனில் நிறை வடைந்தன. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசில்  அணி 5-4 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 9ஆவது முறை யாக கோபா அமெரிக்கா கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. 2010, 2014, 2022 ஆகிய ஆண்டுகளில் இறுதிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்டது போல, மீண்டும் 4 ஆவது கோப்பை வெல்லும் வாய்ப்பை  பறிகொடுத்தது. 1991 முதல் 2025 வரை 34 ஆண்டு களில் இதுவரை 10 கோபா அமெரிக்கா  மகளிர் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மட்டுமே பிரேசில் இரண்டாம் இடம்பிடித்து கோப்பையை நழுவ விட்டது.  இந்த தொடரில் போட்டியை நடத்திய அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம்  வென்றது. மற்ற 9 தொடர்களி லும் பிரேசில் அணி சாம்பியன் படம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

நூலிழையில் கோப்பையை நழுவவிட்ட கொலம்பியா

ஆட்டத்தின் 90ஆவது நிமிடம் வரை கொலம்பியா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் உதிரி நிமிடத்தின் (90+6) கடைசி நேரத்தில் பிரேசில் அணி வீராங்கனை மார்ட்டா கோலடிக்க ஆட்டம் சமனில் நிறைவடைந்தது. இல்லை என்றால் முழு ஆட்டநேர (90’) முடிவிலேயே கொலம்பியா கோபா அமெரிக்கா கோப்பையை முதல்முறையாக கைப்பற்றி இருக்கும். ஆனால் நூலிழையில் கோப்பையை நழுவவிட்டது கொலம்பியா மகளிர் அணி.