games

img

விளையாட்டு...

    மகளிர் உலகக்கோப்பை 2024  -  அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

9ஆவது சீசன் மகளிர் உலகக் கோப்பை டி-20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலை யில், ஞாயிறன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி 17ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஸ்காட் லாந்து அணிகளும் (குரூப் பி), 18ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளும் (குரூப் ஏ) மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் பலமான ஆஸ்திரே லிய அணியை இந்திய அணி வீழ்த்து வது நல்லது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தாவிட்டால் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி, ரன் ரேட்டை எதிர் பார்த்து அரையிறுதி பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும். அதனால் தனது கடைசி லீக் ஆட்டம் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாகும். இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் மோதும் ஆட்டத்தில் இங்கிலாந்து எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட் லாந்து அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து - ஸ்காட்லாந்து
நேரம் : மாலை 3:30 மணி

இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம் : இரவு 7:30 மணி
இரண்டு ஆட்டங்களும் : ஷார்ஜா மைதானம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)

பாஜக எம்.பி., பி.டி.உஷாவின் செயல்பாட்டிற்கு வலுக்கும் கண்டனம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான நிதியை நிறுத்தி வைத்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உள்ள முன்னாள் தடகள வீராங்கனையும், பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.,யுமான பி.டி.உஷா உள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் சொகுசு அறையில் தங்கி அரசு பணத்தை வீணடித்தது தொடர்பாகவும், புதிய சிஇஒ (ரகுராம் ஐயர்) நியமனம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்குள் மோ தல் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினால் கடிதம் மூலம் பி.டி.உஷா மிரட்டுவதாக 12 பேர் கொண்ட செயற் குழு தீர்மானம் நிறைவேற்றியது. வரும் அக்டோபர் 25 அன்று நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் பி.டி. உஷாவை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என செயற்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்,”இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்குள் நிலவும் மோதல் போக்கு முடிவுக்கு வரும் வரை நிதியுதவி வழங்க மாட்டோம்” என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறி வித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் பி.டி.உஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,”இந்திய ஒலிம் பிக் சங்கத்திற்குள் நிலவும் பிரச்சனைகளை விவாதம் மூலம் உடனடியாக தீர்வு காண வேண்டும். மோதல்  போக்கு முடியும் வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு நிதியுத வியை நிறுத்துவது என அக்டோபர் 8 அன்று நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் சங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்திற் குள் உள்ள குழப்பங்கள் தீர்க்கப்படும் வரை இந்திய ஒலிம் பிக் சங்கத்திற்கு எந்த நிதியுதவியும் அனுமதிக்கப்படாது. விளையாட்டு வீரர்களுக்கு நேரடியாக கல்வி உதவித் தொகை மட்டுமே வழங்கப்படும்” என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

பாஸ்பால் நடைமுறையை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது ரோகித் தான் ; கம்பீர் அல்ல கவாஸ்கர் விளாசல்

கிரிக்கெட் உலகில் “பாஸ் பால் (Bazball)” என்ற முறை ஒன்று உள்ளது. அது என்ன வென்றால் டெஸ்ட் போட்டியில் ஒருநாள், டி-20 போட்டிகளை போன்று அதிரடியாக ரன் குவிப்பதே “பாஸ்பால்” முறை ஆகும்.இதனை கிரிக்கெட் உல கிற்கு அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து ஆடவர் அணி யின் பயிற்சியாளர் மெக்கல்லம் (நியூஸிலாந்து) ஆவர். தான் பயிற்சி அளிக்கும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் மூலமாக “பாஸ் பால்” முறை யை கொண்டு வந்து கிரிக்கெட் போட்டியை மேலும் சுவாரஸ்ய மிக்கதாக மாற்றிய பெருமை யும் மெக்கல்லம் - ஸ்டோக் ஸையே சாரும். இந்திய அணி யில் “பாஸ் பால்” முறையை செயல்படுத்த உறு துணை யாக இருந்தவர் கேப்டன் ரோகித் சர்மா தான். இது அனைவரும் அறிந்த விஷயம் தான். தனது வழக்கமான அதிரடியை டெஸ்ட் போட்டிகளிலும் நுழைத்து அத னை மற்ற வீரர்களும் பின்பற்ற ஆலோசனை மற்றும் சிறப்பு பயிற்சி வழங்கியதன் மூலமா கவே இந்தியா அணி டெஸ்ட் போட்டியில் “பாஸ் பால்”  முறை யில் ஜொலித்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணி ஆட்ட சூழ்நிலை க்கு ஏற்ப “பாஸ் பால்” முறை யை பயன்படுத்தி கிரிக்கெட் உலகை மிரட்டி வரும் நிலை யில், இந்திய அணியில் “பாஸ் பால்” என்னும் அதிரடி முறை யை அறிமுகம் செய்தது இந்திய அணியின் தற்போதைய பயி ற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என இன்றைய ஆடும் லெவனில் விளையாடும் சில வீரர்கள் புகழ் பாடி வருகின்றனர். இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பதிலடி கொடுத் துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”வங்கதேசத் திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளை யாடியதற்கு கேப்டன் ரோகித் சர்மா தான் காரணம். ஆனால் பயிற்சியாளர் கம்பீர் தான் காரணம் என வீரர்கள் கூறுவது, அவரது காலில் விழுவதற்கு சமம் ஆகும். கடந்த 2 ஆண்டு களாகவே டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிரடியான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. இதற்கான ஒட்டு மொத்த புகழும் ரோகித் சர்மா வையே சாரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.