games

img

விளையாட்டு...

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு சோகம்
22 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி-20 என 2 விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி யில் (மெல்போர்ன்) ஆஸ்தி ரேலியா அணி வெற்றி பெற, 2ஆவது ஒருநாள் போட்டி யில் (அடிலெய்டு) பாகிஸ் தான் அணி அபார வெற்றி யை பெற்றது.  இந்நிலையில், மூன்றா வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெர்த் நகரில் ஞாயிறன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி (3 விக்கெ ட்டுகள்), நசீம் ஷா (3 விக் கெட்டுகள்) ஆகியோரின் வேகத்தை சமாளிக்க முடி யாமல் ஆஸ்திரேலிய அணி 31.5 ஓவர்களில் 140 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு டன் களமிறங்கிய பாகிஸ் தான் அணி மிடில் ஆர்டர் வீரர்களின் நிதான ஆட்டத் தால் 26.5 ஓவர்களில் 2 விக் கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  அதுமட்டுமல்லாமல் 22 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து பாகிஸ்தான் அணி  வீழ்த்தி புதிய வரலாறு படைத் துள்ளது. அதேபோல் ஒயிட் பால் கேப்டனாக முகமது ரிஸ் வான் பொறுப்புக்கு வந்த முதல் தொடரிலேயே பாகிஸ் தான் வென்றிருப்பது ரசிகர் களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

நெதர்லாந்து நாட்டில் இஸ்ரேல் ரசிகர்களுக்கு தடை?

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் ஐரோப் பிய நாடான நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டம் நகருக்கு கால்பந்து போட்டிகளை பார்க்கச் சென்றனர். கடந்த வியாழனன்று (நவ. 7) கால்பந்து போட்டி நடந்து முடிந்த பின்னர் இஸ்ரே லிய ரசிகர்கள் சிலர் அரபு நாடுகளை சேர்ந்தவர்களை நோக்கி ஆத்திர மூட்டும் வகையில் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள், இஸ்ரே லிய ரசிகர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர். வாக்கு வாதம் கைகலப்பாக மாற இஸ்ரேலிய ரசிகர்கள் 5 பேர் காய மடைந்த நிலையில், தாக்குதலில் ஈடு பட்டதாக அரபு நாடுகளைச் சேர்ந்தவர் கள் 60 பேரை நெதர்லாந்து காவல்துறை யினர் கைது செய்தனர். மோதல் தீவிரமடைய வாய்ப்பு ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் இருக்கும் சூழ லை அடிப்படையாகக் கொண்டு இஸ் ரேல் ரசிகர்கள் அரபு நாடுகளைச் சேர்ந்த வர்களிடம் ஆத்திரமூட்டும் வகையில் கோஷமிட்டனர். இதனால் தான் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இஸ்ரேல் ரசிகர்களுக்கும் மோதல்  ஏற்பட்டது. ஆனால் முதலில் வம்பு  இழுத்த இஸ்ரேல் ரசிகர்களுக்கு எதி ராக நெதர்லாந்து காவல்துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதற்கு  நெதர்லாந்தில் வாழும் மற்றும் தொழில்புரியும் அரபு நாடு களைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் இஸ்ரேல் ரசிகர் களுக்கும் - அரபு நாடுகளைச் சேர்ந்தவர் களுக்கும் மோதல் தீவிரமடைய வாய்ப் புள்ளதால், இஸ்ரேல் ரசிகர்களுக்கு இடைக்காலமாக தங்கள் நாட்டில் கால்பந்து போட்டி நிகழ்வுகளில் பங்கே ற்க தடைவிதிக்க நெதர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

இரண்டு ஆட்டங்களும்:  கச்சிபலி மைதானம், ஹைதராபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)