games

img

இன்று தொடங்கும் இந்தியா – இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி

இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்றிரவு தொடங்குகிறது. 

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற பள்ளிக்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. 

இந்நிலையில்,  3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்றிரவு கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் என்பதால் இப்போட்டியில் வீரர்களின் செயல்பாடு முக்கியத்துவம் பெறும்.

இதில், இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. இந்திய அணியும் தனது முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. மேலும், இன்று நடைபெற உள்ள போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராகக் களம் இறங்குவார் என்று தெரிகிறது. இதுவரை இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13 போட்டிகளில் இந்தியாவும், 5 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளது.