ஐபிஎல் தொடரைப் போல தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) தொடரின் 6-வது சீசன் வியாழனன்று தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வியாழனன்று தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் மட்டுமே நடைபெறு கிறது. புனரமைப்பு காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதா னத்தில் இந்த முறை போட்டிகள் நடைபெறவில்லை. சேலம், கோவை ஆகிய மைதானங்களில் முதன்முறையாக டிஎன்பிஎல் தொடர் நடத்தப்படுகிறது.
லீக் முதல் இறுதி வரை...
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளே ஆப்” சுற்றுக்கு முன்னேறும். ஜூலை 24-ஆம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் நிறைவுபெறுகிறது. “எலிமினேட்டர்” ஆட்டம் 26-ஆம் தேதியும், குவாலிபையர் ஆட்டம் 27-ஆம் தேதியும் சேலத்தில் நடக்கிறது. “குவாலிபையர் 2” ஆட்டம் 29-ஆம் தேதியும், இறுதிப்போட்டி 31-ஆம் தேதி கோவையில் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
அணிகள் விபரம் : |
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் டிராகன்ஸ் திருச்சி வாரியர்ஸ் கோவை கிங்ஸ் மதுரை பாந்தர்ஸ் நெல்லை ராயல் கிங்ஸ் சேலம் ஸ்பார்டன்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் |
பரிசுத்தொகை
போட்டியின் மொத்த பரிசு தொகை : ரூ.1.7 கோடி.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு : ரூ.50 லட்சம்,
2-வது இடத்துக்கு : ரூ.30 லட்சம்
தொடக்க ஆட்டம்
தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் திருநெல்வேலி சங்கர் மைதா னத்தில் நடைபெறுகிறது. (சங்கர் மைதானம் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து 13 கிமீ தொலைவில் சர்வீஸ் சாலையில் உள்ளது)
ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் (தமிழ்)