games

img

விளையாட்டு...

பாரீஸ் பாரா ஒலிம்பிக் 2024 6 இடங்கள் முன்னேறி வரலாறு படைத்த இந்தியா தடகளத்தில் மட்டும் 17 பதக்கங்கள் வென்று சாதனை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆகஸ்ட் 29 அன்று 17 ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர்  தொடங்கியது. 11 நாட்கள் விறு விறுப்பாக நடைபெற்ற இந்த தொடர் ஞாயிறன்று நிறைவு பெற்ற நிலையில், இந்தியா இதுவரை இல்லாத அளவில் மொத்த பதக்க எண்ணிக்கையிலும், புள்ளிப்பட்டியலின் தரவரிசையிலும் ஏற்றம் கண்டு வரலாறு படைத்துள்ளது.  கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் சீசனில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6  வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங் களை வென்று 24 ஆவது இடத்தை பிடித்து இருந்த நிலையில், தற்போது நிறைவு பெற்ற பாரீஸ் பாரா ஒலிம்பிக் கில் இந்தியா 7 தங்கம், 9  வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங் களை வென்றது மட்டுமல்லாமல்,  புள்ளிப் பட்டியலின் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்தை பிடித்துள் ளது. குறிப்பாக கடந்த சீசனை விட நடப்பு சீசனில் 10 பதக்கங்களை கூடுத லாக வென்று புதிய சாதனையும் படைத்தது விளையாட்டு உலகை பிரமிக்க வைத்துள்ளது.  இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இந்தியாவிற்கு தட களத்தில் திறமை குறைவு என்ற உலக நாடுகளின் கூற்றை பாரீஸ் பாரா  ஒலிம்பிக் மூலம் அடித்து நொறுக்கி யுள்ளனர் இந்திய பாரா விளையாட்டு நட்சத்திரங்கள். அதாவது இந்தியா வென்றுள்ள 29 பதக்கங்களில் 17 பதக்கங் ங்கள் தடகளத்தில் மட்டும் கிடைத்துள் ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியா, சீனா மட்டும்...

பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே பதக்க எண்ணிக்கையில் பெரியளவில் உயர்வை கண்டுள்ளன. இந்தியா கடந்த சீசனை விட 10 பதக்கங்கள் கூடுதலாக வென்றுள்ள நிலையில், சீனா 13 பதக்கங்கள் கூடுதலாக வென்றுள்ளது. பாரீஸ் பாரா ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள சீனா 94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலம் என 220 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் பிரிட்டன் நாடு, டோக்கியோ மற்றும் பாரீஸ் ஒலிம்பிக் தொடர்களில் ஒரே எண்ணிக்கையில் (124) பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இம்முறை ரஷ்யா பங்கேற்காததால் அந்நாடு வெல்லும் பதக்கங்களை குட்டி நாடுகள் வென்று பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தன.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2024 சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144 ஆவது சீசன் திங்களன்று அதிகாலை நிறைவு பெற்றது. இந்த தொடரின் கடைசி நிகழ்வான ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை நடை பெற்ற நிலையில், இந்த இறுதி ஆட்டத்தில் உலகத்தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர், தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பிரிட்ஜை எதிர்கொண்டார்.  தனது வழக்கமான அதிரடி மூலம் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-3, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். சின்னருக்கு இது இரண்டாவது  கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். முன்னதாக இதே  ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடை பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று இருந்தார். இதன் மூலம் ஒரே  சீசனில் ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் அமெரிக்க  ஓபன் என இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 4ஆவது வீரர் என்ற பெருமையை சின்னர் பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற சின்னர் கோப்பையுடன் இந்திய மதிப்பில் ரூ.30.12 கோடி பரிசுத் தொகையும், இரண்டாவது இடம் பிடித்த அமெரிக்காவின் பிரிட்ஜ் ரூ.15.11 கோடி பரிசுத் தொகையை அள்ளினர்.