games

img

விளையாட்டு செய்திகள்

டென்னிஸ் உலகின் கவனத்தை ஈர்த்த இத்தாலி வீராங்கனை பவோலினி

களிமண் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் ஞாயிறன்று நிறைவுபெற்றது. 

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசையில் 12ஆவது உள்ள இளம் வீராங்கனையான இத்தாலியின் பவோலினியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் போலந்தின் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற  செட் கணக்கில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக பிரெஞ்சு  ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சாம்பியன் பட்டத்தை நழுவவிட்டாலும் இத்தாலியின் பவோலினி டென்னிஸ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். பவோலினி சர்வதேச டென்னிஸ் தொடர் விளையாட வந்தே இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆகி யுள்ள நிலையில், வலுவான அதிரடி ஆட்டத்தால் போதுமான அனுபவமின்றியும் பிரெஞ்சு ஓபனில் இறுதி வரை முன்னேறி மிரட்டியுள்ளார். இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வரும் காலங்களில் டென்னிஸ் உலகில் பவோலினி முக்கிய நட்சத்திர வீராங்கனையாக ஜொலிப்பர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அமெரிக்க மைதானங்கள் என்றாலே அலறும் வெளிநாட்டு அணிகள்

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா நாடுகளில் கூட்டாக  நடத்தி வருகிறது.

திடீர் கிரிக்கெட் ஆசையால் ஒரு சில உள்ளூர் டி-20 தொடர்களை நடத்தி விட்டு 9ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பையின் நடத்தும் பொறுப்பை மேற்கு இந்தியத் தீவுகளுடன் பகிர்ந்து  கொண்டது அமெரிக்கா. முதன்முறை யாக கிரிக்கெட் உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிடைத்து இருப்ப தால், அமெரிக்கா தடபுடலாக பல  ஆயிரம் கோடி செலவழித்து 3 மைதானங் களை (புளோரிடா, டல்லாஸ், நியூ யார்க்) உருவாக்கியது. இதில் டல்லாஸ், நியூயார்க் மைதானங்கள் உருவாக்கப்பட்டு 5 மாதங்களே ஆகி யுள்ள நிலையில், இந்த 2 மைதானங் களின் பிட்ச் தன்மையை உணர முடியா மல், அமெரிக்காவை தவிர மற்ற உலக நாடுகள் கடுமையாக திணறி வரு கின்றன. குறிப்பாக அமெரிக்க மைதானங் களில் விளையாடிய சீனியர் அணி களில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்  ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளன. மற்ற சீனியர்  அணிகள் இளம் அணிகளிடம் தோல்வி யை தழுவியுள்ளதால், அமெரிக்க மைதானங்களில் ஆட்டம் என்றாலே உள்ளூர் (அமெரிக்கா) அணியை தவிர மற்ற வெளிநாட்டு அணிகள் அலறு கின்றன. அந்தளவுக்கு அமெரிக்க மைதானங்கள் மிக மோசமான பிட்ச் அமைப்பை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பில் சால்ட்டை களமிறக்கிய இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான தாவித் மலன்  காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரை வெளி யேறும் சூழலில் உள்ளார்.  இந்நிலையில், அவருக்கு பதிலாக அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான பில் சால்ட்டை களமிறக்கியுள்ளது இங்கிலாந்து அணி நிர்வாகம். சம்பீத்தில் நிறைவு பெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற பில் சால்ட் 12 போட்டிகளில் விளையாடின 435 ரன்கள் குவித்து மிரட்டி சூப்பர் பார்மில் உள்ள நிலையில், பில் சால்ட் வருகை இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காயம் காரணமாக ஆடும் லெவனில் இருந்து வெளி யேறியுள்ள தாவித் மலனை காட்டிலும் பில் சால்ட் கட்டுகோப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்
தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம்
இடம் : நியூயார்க், 
அமெரிக்கா
நேரம் : இரவு 8 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஹாட் ஸ்டார் (ஒடிடி)