நியூசிலாந்துக்கு எதிரான அடுத்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக இஷான் கிஷானைக் களமிறக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 லீக் சுற்றில், முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் 2 ஆவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர் கொள்கிறது. இந்நிலையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாக இருக்கிறது. அவருக்குப் பதிலாக யாரைக் களமிறக்கலாம் என்ற யோசனையில் இந்திய அணி இருக்கிறது.
இதனைதொடர்ந்து, "ஸ்போர்ட்ஸ் டாக்கிற்கு பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக நல்ல ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை களமிறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.