ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி
ஹாங்காங்கின் முக்கிய நகரான ஹவ்லூனில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றன. இதில் 3ஆவது காலிறுதியில் இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி, மலேசியாவின் யாப் ராய் கிங் - ஜூனைடி ஆரிப் ஜோடியை எதிர்கொண்டது.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராங்கி - சிராக் ஜோடி 21-14, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி 3:30 மணி அளவில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் லின் - சென் ஜோடியை, இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி எதிர்கொள்கிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் முதல் வெற்றியை ருசிப்பது யார்?
17ஆவது சீசன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி (டி-20) ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய் மற்றும் அபுதாபி) நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் (குரூப் பி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் சனிக்கிழமை அன்று அபுதாபி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இலங்கை - வங்கதேசம்
இடம் : சையத் சர்வதேச மைதானம், அபுதாபி / நேரம் : இரவு 8 மணி சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஓடிடி)
புரோ கபடி 2025 : இன்றைய ஆட்டங்கள்
உ.பி., யோதாஸ் - ஜெய்ப்பூர்
நேரம் : இரவு 8 மணி
புனே - தெலுங்கு டைட்டன்ஸ் நேரம் : இரவு 9 மணி
இரண்டு ஆட்டங்களும் : எஸ்எம்எஸ் மைதானம், ஜெய்ப்பூர், ராஜஸ்தான் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)