games

img

விளையாட்டு...

ஐபிஎல் போட்டியால் வந்த வினை சர்வதேச கிரிக்கெட் அரங்கை அதிரடியால் மிரட்டும் ஹெட், அபிஷேக்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும். டெஸ்ட், ஒருநாள் போட்டி களில் பதற்றம் இல்லாமல் நிதான மாக ரன் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் திறன்  மிக்க சிறப்பான வீரர் என்ற அடை யாளத்துடன் வலம் வந்த டிராவிஸ் ஹெட் 2024 ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு தனது போக்கை மாற்றிக் கொண்டுள்ளார். அதாவது ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை போல டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று வகை சர்வதேச போட்டிகளிலும் பயமின்றி மிரட்டி வருகிறார்.  இதற்கெல்லாம் காரணம் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டரு மான டேனியல் வெட்டோரி (ஹைதரா பாத் தலைமை பயிற்சியாளர்) தான். வெட்டோரியின் ஆலோசனை மற்றும் பயிற்சியின் கீழ் 2024 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரர் களமிறங்கி னார். அவருடன் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மாவும் களமிறங்கினார். இரண்டே வார்த்தையில் உருவான அதிரடி நாயகர்கள் டேனியல் வெட்டோரி, “என்ன வேணாலும் செய்யுங்கள். ஆனால் பவர்பிளே முடியும் (6 ஓவர்களில்) முன்னரே 70 முதல் 100 ரன்கள் குவி யுங்கள். ஆட்டமிழந்தாலும் பரவா யில்லை” என ஹெட், அபிஷேக்கிற்கு சுதந்திரமான செயல்பாட்டிற்கு ஆதரவு அளித்தார். வெட்டோரியின் ஆலோ சனை ஒருபக்கம் என்றால், இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஹைதரா பாத் பேட்டிங் பயிற்சியாளருமான ஹேமங் பதானியின் சிறப்பு பயிற்சி இருவருக்கும் வலுசேர்த்தது. ஆலோ சனை மற்றும் சிறப்பு பயிற்சியால் உத்வேகம் கண்ட டிராவிஸ் ஹெட், அபி ஷேக் சர்மா ஜோடி ஐபிஎல் தொடரில் தங்களது அதிரடி ஆட்டத்தால் தூள்  கிளப்பியது. பவர் பிளேயில் அதிக  ரன், ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் (120 பந்து களுக்கு 287 ரன்கள்) என பல்வேறு சாதனை நிகழ்வுகள் நிகழ்ந்தன. தற்போது இருவரது அதிரடி ஆட்டம் ஐபிஎல் போட்டியோடு நின்றடையவில்லை. சர்வதேச அரங்கி லும் பட்டையை கிளப்பி வருகின்றனர். அபிஷேக் சர்மா இந்திய அணியின் ஆடும் லெவனில் தற்போது தான் இடம்பிடித்து ஓரளவுக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வங்கதேச அணிக்கெதிரான முதல் டி-20 ஆட்டத்தில் 7 பந்துகளில் 16  ரன்கள் குவித்து இருந்த நிலையில், எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார். இல்லையென்றால் வங்கதேச அணியை புரட்டியெடுத்து இருப்பார். டிராவில் ஹெட்டோ மிக மோசமான அளவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். குறைந்த பந்துகளில் சதம், ஒரே ஓவரில் அதிக சிக்சர் என பல்வேறு நிகழ்வுகளுடன் தனது அதிரடி ஆட்டத்தால் சர்வதேச அரங்கை மிரட்டி வருகிறார். இவரது அதிரடி ஆட்டத்தால்  இங்கிலாந்து அணி சோர்வடைந்ததாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுதந்திரம் முக்கியம்.. தங்களது துறையில் சுதந்திரமாக பணியாற்ற உத்தரவு பிறப்பித்தால் ஹெட், அபிஷேக் போன்று இன்னும் பல அதிரடி நட்சத்திரங்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு வருவார்கள். மனிதர்களுக்கு சுதந்திரம் முக்கியம்.

மகளிர் உலகக்கோப்பை 2024 

9ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை டி-20 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், வியாழனன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் - வங்கதேசம் (குரூப் பி) அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஆட்டம்

மேற்கு இந்தியத் தீவுகள் - வங்கதேசம்
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : ஜார்ஜா மைதானம், துபாய்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)