புதுதில்லி, செப்.17- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சமமான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட் உல கோப்பை நடைபெறவுள்ள நிலையில் ஐசிசி பரிசுத்தொகை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் இனி வரும் உலகக் கோப்பை போட்டிகளில் ஆண், பெண் இருவருக்கும் சமமான பரிசுத்தொகை ரூ.20 கோடி வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பெண்கள் பிரிவிற்கு ரூ.8.3 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.