விமர்சனங்களுக்கு மட்டையால் பதிலடி கொடுத்த “சேட்டன் சஞ்சு சாம்சன்”
டெஸ்ட், டி-20 என இரண்டு விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க வங்க தேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகளை டி-20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி வங்கதேச அணியை “டூர் (சுற்றுப்பயணம்) ஒயிட் வாஷ்” செய்தது. இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி-20 தொடரின் கடைசி ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களமிறங்கிய நிலையில், சஞ்சு சாம்சனின் பிரம்மாண்ட அதிரடி (111 ரன்கள்) சதத்தால் மற்றும் சூர்யகுமார் (75), ஹர்திக் பாண்டியா (47), ரியான் பார்க் (34) ஆகியோரின் அசத்தலான அதிரடி யால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய 297 ரன்கள் குவித்தது. 120 பந்துகளுக்கு 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக கடின மான இலக்குடன் களமிறங்கிய வங்க தேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 133 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன் குவித்த இரண்டா வது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன் நேபாளம் அணி மங்கோலியா அணி யிடம் 314 ரன்கள் குவித்ததே சர்வதேச டி-20 அரங்கில் அதிகபட்ச ரன் சாதனை யாக உள்ளது.
சேட்டனுக்கு குவியும் வாழ்த்து
தனது அதிரடி சதம் மூலம் இந்திய அணி 297 ரன்கள் குவிக்க உதவிய சஞ்சு சாம்சன் கடந்த காலங்களில் மந்தமான பேட்டிங் காரணமாக ஆடும் லெவனில் இடம்பிடிக்க முடியாமலும், கடும் விமர்சனங்களையும் எதிர்கொண் டார். “ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார்? ஒருவேளை பணத் திற்காக ஐபிஎல் போட்டிகளில் நனறாக விளையாடி, சர்வதேச போட்டிகளில் மோசமாக விளையாடுகிறாரா?” என் றெல்லாம் விமர்சனங்கள் கிளம்பின. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் சஞ்சு சாம்சன் கேரளாவில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதுவும் வெறுமென பதிலடி கொடுக்கவில்லை. 40 பந்து களில் சதமடித்த சஞ்சு சாம்சன், டி-20 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை மற்றும் ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்து ஹைதரா பாத் ஆடுகளத்தை அமர்க்களப்படுத்தி னார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சனை இந்திய ரசிகர்கள் செல்லமாக சேட்டன் என அழைப் பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உலகக்கோப்பை 2024
9ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை டி-20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், திங்களன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் (குரூப் ஏ) மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அதிர்ஷ்ட வாய்ப்புடன் அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணத்தில் நியூஸிலாந்து அணியும், ஆறுதல் வெற்றியுடன் விடைபெறும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டம்
பாகிஸ்தான் - நியூஸிலாந்து
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : துபாய் மைதானம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)