games

img

வாழ்க்கை ஒரு வட்டம் என்று நான் நம்புகிறேன் – மனம் திறந்த அஸ்வின்  

வாழ்க்கை ஒரு வட்டம் என்று நான் நம்புகிறேன், எனக்கு நடந்தது பற்றி அதிகம் திரும்பி பார்க்க விரும்பவில்லை என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.  

துபாய் – ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட்டு நிகழ்ச்சி தொடர்பான பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, அதிர்ஷ்டவசமாக வாழ்க்கை ஒரு முழு வட்டம் என்று நான் நம்புகிறேன்.  பேட்டன்கனை புரிந்துகொள்வது என்பது கடந்த 2 வருடங்களாக என் வாழ்க்கையில் நான் சிறப்பாகச் செய்த காரியங்களில் ஒன்று. எனக்கு நல்ல செயலாற்றல் இருந்தபோதெல்லாம் நான் எப்போதும் சில ஆழமான பள்ளங்களையும், நீண்ட கால தேக்கத்தையும் அனுபவித்திருக்கிறேன்.  

அதுபோன்ற தேக்கம் ஏன் நிகழ்ந்தன என்பதைப் பற்றி நான் அதிகம் எண்ணிக் கொண்டிருக்க விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக இது ஒருமுறை, என் வாழ்க்கையில் அனுபவித்தேன்.  மேலும் ஒரு முழு வாழ்க்கையிலும் வெற்றியை விட தோல்விகளையே அதிகம் பெற்றிருக்கும் என்ற ஷேன் வார்னின் தத்துவம் சரியானது என்று அவர் இவ்வாறு கூறியுள்ளார்.