கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை கேப்டனுடனான மோதலில் ஓய்வறைக்குச் சென்ற அல்ஜாரி ஜோசப் 2 போட்டிகளில் விளையாட தடை
கிரிக்கெட் விளையாட்டில் சின்ன சின்ன மோதல் சம்பவங்கள் இருக்கும். முக்கியமாக மோதல் சம்ப வங்கள் எதிரணிகளுக்கும், நாடு களுக்கு இடையே மட்டுமே இருக்கும். ஒரே அணி வீரர்களுக்கு மோதல் சம்ப வங்கள் அவ்வளவாக அரங்கேறாது. அவ்வாறு நிகழ்ந்தாலும் டிரஸ்ஸிங் ரூமிற்குள் வீரர்கள் பேசி தீர்த்துக் கொள்வார்கள். மைதானத்தில் மோத லில் ஈடுபடமாட்டார்கள். ஏன் மோதலை வெளியில் கூட காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். இதுதான் கிரிக்கெட் உலகின் வரலாறு. பீல்டிங் செட் அப் மோதல் இந்நிலையில், கிரிக்கெட் உலகின் வரலாற்றில் முதல் முறையாக ஒரே அணியில் சக வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வீரர் ஒருவர் ஓய்வறைக்கு கோபித்து கிளம்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது. 3 நாட் களுக்கு முன்பு மேற்கு இந்தியத் தீவுகள் - இங்கிலாந்து அணிகளுக்கு இடை யிலான கடைசி ஒருநாள் போட்டி பார்படாஸ் (மேற்கு இந்தியத் தீவுகள்) மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளை யாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்களை எடுத்தது. அதன்பின் கள மிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 43 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்து அபார வெற்றியை பெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியில் பேட்டிங் செய்த பொழுது 4ஆவது ஓவரை வீசுவதற்கு அல்ஜாரி ஜோசப் அழைக்கப்பட்டார். அப்போது பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் ஜோர்டன் காக்ஸ்க்கு ஏற்றவாறு சில பீல்ட் செட் அப்பை கேப்டன் ஷாய் ஹோப் மாற்றினார். ஆனால் ஷாய் ஹோப் அமைத்த பீல்ட் செட் அப் வேகப் பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த ஓவ ரின் முதல் பந்தை வீசிவிட்டு உடனடி யாக பீல்ட் செட் அப்பை மாற்றுமாறு அல்ஜாரி ஜோசப் கைகளை காட்டி சாய் ஹோப்பிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் ஷாய் ஹோப் எந்த மாற்றத்தை யும் செய்யவில்லை. தொடர்ந்து 2ஆவது பந்தில் பிரம்மாண்ட பவுன்சர் மூலம் ஜோர்டன் காக்ஸ் விக்கெட்டை வீழ்த்திய போது அல்ஜாரி ஜோசப் ஆக்ரோஷமாக கோபத்தில் கத்திக் கொண்டே இருந்தார். தொடர்ந்து அந்த ஓவரை மெய்டன் (0 ரன்கள்) செய்த அவர், உட னடியாக களத்தில் இருந்து வெளி யேறி ஓய்வறை நோக்கி நடந்து செல்ல தொடங்கினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளவில்லை. 10 ஓவர்களுடன்... பின்னர் சில நிமிடங்களில் சக வீரர் களுடன் புகார் கூற தொடங்கிய அல்ஜாரி ஜோசப், நிழற்குடையில் கோபமாக பேசிக்கொண்டே இருந் தார். இதனைத் தொடர்ந்து பயிற்சி யாளர் டேரன் ஷமியின் வார்த்தை களால் சமாதானமான அவர், அடுத்த ஓவரில் மீண்டும் களத்திற்கு வந்தார். அல்ஜாரி ஜோசப்பின் கோபத்தால் ஒரு ஓவர் (5ஆவது ஓவர்) முழுக்க மேற்கு இந்திய தீவு அணிகள் 10 வீரர்களுடன் களத்தில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சஸ்பெண்ட் ஒரே அணிக்குள் நிகழ்ந்த மோதல் விவகாரம் என்றாலும், இது விதிமீறல் என்பதால் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அல்ஜாரி ஜோசப் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கையில் அல்ஜாரி ஜோசப் 2 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் (இங்கிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகளில்) விளையாட தடை விதித்துள்ளது மேற்கு இந்தியத் தீவு கள் கிரிக்கெட் வாரியம். சொந்த அணிக் குள் நிகழ்ந்த பிரச்சனையால் வீரர் ஒரு வர் பெவிலியன் சென்றதும், வீரர் ஒரு வருக்கு 2 போட்டிகளில் தடைவிதித்து இருப்பதும் கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சாய் ஹோப் மீது தான் தவறு
பந்துவீசப் போகும் பந்துவீச்சாளர்கள் மட்டுமே பீல்டிங் செட் அப் சொல்வார்கள். ஏனென்றால் 6 பந்துகளும் வீசும் ஸ்டைல், பந்து பேட்டில் பட்டு எவ்வாறு திசையில் திரும்பும் என்பதெல்லாம் பந்துவீச்சா ளர்கள் கையில் தான் உள்ளது. பந்துவீச்சாளரின் ஆலோசனை இல்லாமல் பீல்டிங் செட் அப் செய்ய முடியாது. பந்துவீச்சாளரின் திறனை நன்கு தெரிந்த மூத்த கேப்டன்கள் (தோனி, கோலி, ரோகித், ஸ்மித் போன்றோர்) சுயமாக, அதாவது பந்துவீச்சாளர் நினைப்பதை போலவே பீல்டிங் செட் அப் செய்வார்கள். மற்றபடி பந்துவீச்சாளரின் ஆலோசனை இல்லாமல் கேப்டன் பீல்டிங் செட் அப் செய்ய முடியாது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் சாய் ஹோப் பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பிடம் கருத்து கேட்காமல் செட் அப் செய்தது காரணமாக மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது.