games

img

செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 193 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் 6ஆவது சுற்றில் ஆடவா் பிரிவில் இந்தியா - ஹங்கேரி அணிகள் மோதின. அதில் இந்தியா 3 க்கு 1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 7 ஆவது சுற்றில் இந்திய பெண்கள் அணி ஜார்ஜியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 3க்கு 1 என்ற புள்ளி கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தியது. இதன்மூலம் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.

இதேபோல் இந்திய ஆண்கள் பிரிவில் குகேஷ், சீனாவின் வெய்யீயை தோற்கடித்தார். மற்ற வீரர்கள் டிரா செய்தனர். இதையடுத்து, இந்திய ஆண்கள் அணியும் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் முன்னேறியது. இன்னும் மீதமிருக்கும் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயமாக தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.