games

img

யூனிபர் யு-23 பெண்கள் ஹாக்கி போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா – அயர்லாந்து பலப்பரீட்சை  

யூனிபர் யு-23 பெண்கள் ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா அயர்லாந்தை எதிர்கொள்கிறது.  

5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யு-23 ஹாக்கி போட்டிகள் அயர்லாந்தில் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது. 

மேலும், மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2021க்குப் பிறகு, அயர்லாந்து அணியை மீண்டும் எதிர்கொள்கிறது. ஜூன் 20 ஆம் தேதி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. அதன்பிறகு ஜூன் 22 ஆம் தேதி உக்ரைனை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இறுதிப் போட்டி ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.