ஆசிய தடகள போட்டியில் வெண்கலம் வென்று அசத்திய தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தென் கொரியாவில் நடைபெறும் 26ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 20 கி.மீ நடைபோட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் செர்வின் செபாஸ்டியன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் இருந்து போட்டிகள் தொடங்கியது. இதில் 20 கி.மீ. ரேஸ் வாக் ஆடவர் இறுதிப் போட்டியில் 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ. இலக்கை கடந்து செர்வின் வெண்கலம் பதக்கம் வென்றார்