games

img

டாய் ட்ஜூங்கை வீழ்த்துவாரா சிந்து?

பேட்மிண்டன் தொடரில் எலியும், பூனையுமாக இருப்பவர்கள் இந்தியா வின் சிந்து, சீன தைபேவின் டாய் ட்ஜூ யிங். இருவருக்கும் தனிப்பட்ட வெறுப்பு இல்லையென்றாலும் போட்டியின் போது ஆக்ரோஷமாக மோதிக்கொள்வார்கள். காரணம்  முக்கியமான சாம்பியன்ஷிப் ஆட்டங்களின் அரையிறுதி, இறுதி ஆட்டங்களில் இருவரும் மாறி மாறி வெற்றி, தோல்வியை அதிகம் ருசித்தவர்கள். இத னால் சிந்து - டாய் மோதும் ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக நடைபெறும். இருப்பினும் சிந்து வை டாய் தான் அதிக முறை வீழ்த்தியுள்ளார். தற்போதைய உலகத்தர வரிசையில் (2-வது இடத்தில் உள்ள டாய் ட்ஜூ யிங். 7-வது சிந்து) டாய் தான் முன்னணியில் இருக்கிறார். ட்ஜூ யிங்கை சிந்து வீழ்த்துவது சற்று சிரமமான காரியம் தான் என்றாலும் வெள்ளியன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.