பாலி,டிச.5- உலக பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தோனேஷிய நாட்டின் பாலி நகரத்தில் உலக பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் சிந்துவை நேர் செட் கணக்கில் தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங் வீழ்த்தினார். நடப்பு உலக சாம்பியனும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சிந்து, உலகின் ஆறாவது இடத்தில் உள்ள கொரிய வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 16-21 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இந்த வெற்றியின் மூலம், சீசன் இறுதிப் பட்டத்தை வென்ற முதல் தென் கொரியப் பெண்மணி என்ற பெருமையை அன் செ யங் பெற்றார். டிசம்பர் 12 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் ஹுல்வாவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.