games

img

குளிர்கால ஒலிம்பிக் தொடர் ரஷ்யா அபாரம்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடை பெற்று வரும் 24-வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஊக்கமருந்து பிரச்ச னையால் நாடுகளின் அந்தஸ்து இல்லாமல் ஒலிம்பிக் கமிட்டி பெயரில் களமிறங்கியுள்ள பதக்க குவிப்பில் அசத்தி வருகிறது. கடந்த ஒலிம்பிக் தொடரில் (தென்கொரியா - 2018) மொத்தம் 17 பதக்கங்கள் (2 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம்) வென்ற ரஷ்யா நடப்பு சீசனில் 13-வது நாளிலேயே 24 பதக்கங்கள் வென்று அதிக பதக்கங்கள் குவித்த நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. எனினும் தங்கப்பதக்கம் குறைவாக வென்றிருப்பதால் ரஷ்யா 9-வது இடத்தில் உள்ளது. ரஷ்யா நடப்பு சீசனில் 4 தங்கம், 8 வெள்ளி, 12 வெண்கலம் என 24 பதக்கங்கள் குவித்துள்ளது. நார்வே தங்கப்பதக்க வரிசையிலும், மொத்த பதக்க வரிசையிலும் முதலிடத்தில் உள்ளது. நார்வே 13 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்கள் குவித்துள்ளது.

பதக்கப்பட்டியல் 
நாடுகள்          தங்கம்        வெள்ளி       வெண்கலம்    மொத்தம்
நார்வே                 13                    7                       8                        28
ஜெர்மனி             10                    6                       5                        21
அமெரிக்கா         8                     8                       5                        21    
ஸ்வீடன்                7                     4                       4                        15
சீனா                      7                     4                       2                        13    

 

புரோ கபடி (இன்றைய ஆட்டங்கள்)
புனே - பெங்கால் (இரவு7:30)/தெலுங்கு டைட்டன்ஸ்-தில்லி (இரவு 8:30) 
தமிழ்நாடு - குஜராத் (இரவு 9:30)

3 ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெறுகிறது