games

img

தோல்வியே இல்லாமல் மகுடம் சூடிய இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி  போட்டி 16 ஆண்டு களுக்குப் பிறகு தமிழ்நாடு தலைநகர் சென்னையில் ஆக. 3 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது.  இந்த தொடர் மூலம் விளையாட்டு உலகமே சென்னை பக்கம் திரும்பி பார்க்கும்படி செய்துள்ளது தமிழ்நாடு அரசு. அப்படி என்னதான் செய்திருந்தது என்பதை முதலில் பார்ப்போம்: ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரில் பிரத்யோகமாக அமைக்கப்படும் புதிய ஆடுகளத்தில் ஆடுவது வழக்கம். அத்தகைய ஆடுகளத்தை நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் ரூபாய் 19 கோடி செலவில் அமைத்து உலக அளவில் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் பெருமைப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடை பெறும் ஒலிம்பிக் தொடர் ஹாக்கி போட்டிக்கு பயன்படுத்த விருக்கும் ‘பாலிகிராஸ்’ எனப்படும் நவீன ஆடுகளம் அமைக்கப்பட்டது.

கரும்புச் சக்கை மூலக்கூறு

இந்த ஆடுகளம், கரும்பு சக்கையில் இருக்கும்  மூலக்கூறுகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆடுகளங்களில் ஊற்றப்படும் நீரின் அளவை விட 30 விழுக்காடு குறைவாக ஊற்றினாலே போது மானது. இதனால் தண்ணீர் சேமிக்கப் படுகிறது. மேலும் அதன் பராமரிப்பு செலவு மற்ற ஆடுகளங்களை காட்டிலும் 45 விழுக்காடு குறைவு என்பது கூடுதல் சிறப்பாகும். இவைகள் அனைத்தையும் விட, மென்மையான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்படாது. விளையாட்டின் போது கை, கால் முறிவு ஏற்படுவதில் இருந்து பாது காப்பு கிடைத்தது கூடுதல் சிறப்பாகும். இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த ஆடுகளம் உலகிலேயே முதல்  முறையாக சென்னையில் தான் பயன் படுத்தப்பட்டது என்பது தமிழகத்துக்கு பெருமை. புறாக்களின் இருப்பிடமாக விளங்கிய பார்வையாளர் இருக்கை கள், நிழற்குடைகள் அனைத்தும் சீர மைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

கடந்து வந்த பாதை...

இந்த தொடரில்  மிகவும் பலமான அணிகளாக கருதப்பட்டது இந்தியா, பாகிஸ்தான், தென்  கொரியா மற்றும் ஜப்பான் அணிகள்தான். சீனா  ஏதா வது  தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று  எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தொடரின் துவக்க நாளில் நடந்த முதல் ஆட்டத்தில் சீனாவுக்கு எதிராக ஏழு கோல்கள் அடித்து மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றதுடன் நாங்கள் அபாயகரமானவர்கள் என்ற னர். இந்தியாவின் வெற்றி பயணத்தை  எந்த அணியாலும் தடைபோட முடியவில்லை. தொடக்க சுற்றில் ஐந்து ஆட்டங் களில் நான்கில் வெற்றியும் ஒன்றில் டிரா செய்து அசத்தினர். அரை இறுதியில் ஜப்பானை 5-0  என்று ஊதி தள்ளிய இந்திய வீரர்கள், முதல் முறையாக இறுதிப்  போட்டிக்குள் நுழைந்த மலேசியாவை யும் வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்த  தொடரில் களமிறங்கிய 5 அணிகளை யும் வென்ற ஒரே அணி இந்திய அணி என்ற பெருமையை பெற்றது.

நட்புறவை பலப்படுத்திய ஆட்டம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத நிலை யில், ஆசிய ஹாக்கி தொடரில் விளை யாடுவதற்காக பாகிஸ்தான் அணி  இந்தியா வந்தது. அதுவும் சென்னை யில் விளையாடியது. ஹாக்கி உல கமே எதிர்பார்த்து காத்துக் கொண்டி ருந்த இந்த ஆட்டம் ஆக. 9 அன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. அரங்கமே நிரம்பி வழிந்தது. முத லமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பாகிஸ் தான் வீரர்களை வரவேற்று போட்டி யை நேரில் கண்டு களித்தனர். இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற் றது. தமிழ்நாட்டு ரசிகர்கள் விளை யாட்டை விளையாட்டாக மட்டும் பார்த்தனர். மொத்தத்தில் இந்தத் தொடரில் நடந்த இருபது ஆட்டங் களில் 94 கோள்கள் அடிக்கப்பட்டன. இதில் இந்திய வீரர்கள் மட்டும் 29 கோள்கள் அடித்து அசத்தினர்.

சிறந்த கோல் தமிழருக்கு

இந்திய அணி அதிகபட்சமாக ஒரு  ஆட்டத்தில் ஏழு கோல்களும் பாகிஸ் தான் ஆறு கோல்கள் அடித்தது. தனிப் பட்ட முறையில் ஒன்பது கோல்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் தீப் சிங் சிறந்த வீரர் விருதை வென்றார். சிறந்த கோல் விருது: தமிழ்நாட் டின் செல்வம் கார்த்தி. வளர்ந்து வரும் வீரர் விருது; பாகிஸ்தான் அப்துல் சாகித். வளர்ந்து வரும் கோல்கீப்பர் விருது: ஜப்பானின் டுமி கிடகவா. தொடரின் சிறந்த கோல் கீப்பர்: தென் கொரியாவின் கிம்  ஜேய் ஹியோன், தொடர் நாயகன் விருது: இந்தியா வின் மந்தீப் சிங் ஆகியோர்வென்றனர்.

- சி. ஸ்ரீராமுலு