games

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் அசத்தல்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையும், போலந்து நாட்டின் நட்சத்திரமுமான  ஸ்வியாடெக், அமெரிக்காவின் பெகுலாவை 6-3, 7-6(7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். கடந்த சில மாதங்களாக பார்ம் பிரச்சனையில் சிக்கி தவித்த ஸ்வியாடெக் அமெரிக்க ஓபன் மூலம் மீண்டும் பார்மிற்கு வந்து மிரட்டலான ஆட்டத்துடன் அபாரமாக விளையாடி வருகிறார்.

;