சென்னை டபிள்யு.டி.ஏ ஓபனில் மிரட்ட லான ஆட்டத்தை வெளிப் படுத்திய சிறப்பிற்காக 17 வயது கத்துக்குட்டி வீராங் கனையான செக் குடியர சின் லிண்டா புருவிர்டோ வாவிற்கு போட்டியை நடத் தும் தமிழ்நாடு அரசு சார் பில் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடை பெற்றது. பிரிட்டிஷ் இந்தி யாவில் டென்னிஸ் வீராங்க னையாக வலம் வந்த மேகி அமிர்தராஜ் - ராபர்ட் அமிர்தராஜ் ஆகியோரது நினைவாக பாராட்டு கேடயத்தை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
இன்று இறுதி ஆட்டம் (இரண்டு பிரிவுகளிலும்)
நேரம் : தோராயமாக மாலை 5 மணிக்கு மேல்
இடம் : எஸ்டிஏடி மைதானம், நுங்கம்பாக்கம்
சேனல் : சோனி டென் (வரிசைகள்). சோனி லைவ் கணக்கு இருந்தால் இலவசமாக காணலாம்.