டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான டபிள்யு.டி.ஏ (WTA - Women’s Tennis Association) தொடரின் 7-வது சீசன் சென்னை நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் மட்டும் பங்கேற்கும் இந்த சர்வதேச தொடர் செப்., 12-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி (SDAT - Sports Development Authority of Tamil Nadu Tennis Stadium) மைதானத்தில் தொடங்கியது. தற்போது இந்த தொடர் பாதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒற்றையர் பிரிவில் வியாழனன்று 2-வது சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது. இரட்டையர் பிரிவிலும் 2-வது சுற்று ஆட்டங்கள் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளியன்று தொடங்கு கிறது. இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறும் நேரத்தை பொறுத்து காலிறுதி ஆட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
சென்னை சர்வதேச டபிள்யு.டி.ஏ ஓபனை நேரில் காண ஆன்லை னில் சிரமமின்றி டிக்கெட்டுகளை பெறலாம். மொத்தம் 4 பெவிலியன் பாக்ஸ் உள்ளது. டென்னிஸ் மைதான பிட்ச் பகுதி யின் மிக அருகில் அமர்ந்து ஆட்டத்தை காணும் பகுதி பாக்ஸ் -1 ஆகும். அதற்கு மேலே உள்ள பகுதிகள் 2,3,4 என்று பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பாக்ஸி ற்கும் டிக்கெட் விலை வேறுபாடும். இறுதி ஆட்டத்தின் டிக்கெட் விலை, தற்போதைய விலையில் இருந்து 50% (தோராயமாக) அதிகரிக்கப்படும். அதா வது தற்போது பச்சை பாக்ஸ் இடத்தில் ஒரு நபருக்கு ரூ.300 என்றால், இறுதி போட்டி யில் ரூ.450 வசூலிக்கப்படும். இறுதிப் போட்டி செப்., 18-ஆம் தேதி நடைபெறு கிறது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற லிங்க் : https://chennaiopenwta.in/ பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வசதி செய்துள்ளது தமிழ்நாடு அரசு (குறிப்பிட்ட நேரம் மட்டும்).
தற்போதைய நிலையில் டிக்கெட் விலை (ஒரு நபருக்கு)
பாக்ஸ் - 1 (பச்சை) : ரூ.300
பாக்ஸ் - 2 (மஞ்சள்) : ரூ.200
பாக்ஸ் - 3 (பிரவுன்) : ரூ.100
பாக்ஸ் - 4 (நார்த் மஞ்சள், சவுத் மஞ்சள்) : ரூ.200