games

img

சென்னை ஓப்பன்: காலிறுதியில் போலாந்து-இங்கிலாந்து வீராங்கனைகள்

சென்னை, செப்.15- சென்னை ஓப்பன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் நான்காவது நாள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 30 வயதாகும் போலந்தின் மக்டா லினெட், ரஷ்யாவின் செலக் மேதேவாவை எதிர் கொண்டார்.  ஆட்டம் தொடங்கியதிலிருந்து மக்டா லினெட் முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டார். முதல் செட்டை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட் ஆட்டத்திலும் தனது அதிரடியை காட்டினார். ரஷ்யாவின் செலக்  இளம் வீராங்கனை யாக இருந்தாலும் ஈடு கொடுக்க முடி யாமல் எளிதில் சரணடைந்தார்.  இத னால் மிக எளிதில் புள்ளிகளை குவித்த மக்டா  லினெட் 6-0 என்ற கணக்கில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.  

இந்த வெற்றியின் மூலம் கால் இறுதிக்குள் நுழைந்த மக்டா லினெட், கனடாவின் ரெபக்கா மரியானாவை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் இங்கி லாந்தின் கேட்டி ஸ்வான்,ரஷ்யாவின் கசனோவா இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.  கடும் சவால் கொடுத்த  17 வயதாகும் ரஷ்ய வீராங்கனையின் ஆட்டத்தில் அனல் பறந்ததால் இரு வரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் இங்கிலாந்து வீராங்கனை ஸ்வான் 7-6 செட் கணக்கில் வெற்றிபெற்றார். இரண்டாவது செட்டில் ஆட்டம் மேலும் சூடு பிடித்தது. ஆட்டத்தின் இடையில் ரஷ்ய வீராங்கனைக்கு உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். மீண்டும் களத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தார்.  இருந்தாலும் இங்கிலாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாவது செட்டையும் இழந்தார். இறுதியில் இங்கிலாந்து வீராங்கனை 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதிபெற்றார். காலிறுதியில் அவர் ஜப்பான் வீராங்கனை நோவ் `ஹிபினோவை எதிர்கொள்கிறார்.

;