வியாழன், செப்டம்பர் 23, 2021

games

img

முதல்முறையாக கிராட்ஸ்லாம் காலிறுதிக்குள் நுழைந்த கனடாவின் லேலா

யு.எஸ் ஓபன் போட்டியில் பிரபல வீராங்கனை கெர்பரை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்குள் நுழைந்தார் கனடாவின் லேலா.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான யு.எஸ்.ஓபன் போட்டி, அமெரிக்காவின் நியூயார்க்கில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராட்ஸ்லாம் காலிறுதிப்போட்டியின் 4வது சுற்றில் தரவரிசையில் 73 ஆம் இடத்தில் உள்ள லேலா, பிரபல வீராங்கனையும் 2016 யு.எஸ்.ஓபன் சாம்பியனுமான ஜெர்மனியைச் சேர்ந்த கெர்பரை எதிர்கொண்டார்.  3வது சுற்றில் ஓசாகாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்த லேலா, இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி 4-6, 7-6 (5), 6-2 என வென்று முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் உலகின் நெ.5 வீராங்கனையான உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவுடன் லேலா மோதுகிறார். 

;