games

img

நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்  

நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டியில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 4 ஆவது இடத்தை பிடித்தார்.  

நார்வேயில் தற்போது நடைபெற்று வரும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இந்த தொடரின் 7ஆவது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.  போட்டியின் 43ஆவது நகர்வின்போது கார்ல்சனை, விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார்.  இதையடுத்து கார்ல்சனை வீழ்த்திய ஆனந்த், நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டி தொடரில் 4ஆவது இடம் பிடித்தார். இந்த தோல்வியினால் கார்ல்சன் 2வது இடத்துக்கு சென்றார்.  

5ஆவது சுற்றில் அனிஷ் கிரியிடமும், 9ஆவது சுற்றில் பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவிடமும் தோல்வி அடைந்ததால், ஆனந்த் 5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளார்.    

5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சனை வீழ்த்தியிருந்தார் குறிப்பிடத்தக்கது.