இன்று (10-வது நாள்)
மதியம் 3 மணிக்கு மேல் 7வது சுற்று ஆட்டங்கள் நடைபெறும்
செஸ் என்பது சற்று வித்தியாசமான ஆட்டம் ஆகும். யார் பலம் வாய்ந்த, பலம் குறைந்த வீரர் - வீராங்கனைகள் என வாயால் மட்டுமே கூற முடியும். அதாவது அவர்கள் குவிக்கும் வெற்றி, தோல்விகளை பொறுத்து தான். கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை போன்று இவர் பலமான வீரர் இவர் வெற்றி பெற்றுவிடுவார் என ஆருடம் கூறும் வேலை இங்கு இல்லை. அதாவது செஸ் வீரர் - வீராங்கனைகளுக்கு இன்னும் ஆதிக்கம், பலம் என எதுவும் கிடையாது. அதே போல இந்த நாடு அசத்தலாக விளையாடும் என்று கூற முடியாது. காரணம் செஸ் விளை யாட்டின் போது எந்த நாட்டு நட்சத்தி ரங்களாக இருந்தாலும் ஒரு சிறிய தவறான காய் நகர்த்தலால் ஒட்டு மொத்த ஆட்டமே தலைகீழாக மாறும். அதன் பின் எவ்வளவு போராடினாலும் வெற்றி என்ற சொல்லை கேட்க கூட முடியாது. இது தான் செஸ் விளையாட்டு.
ஆனால் சென்னையில் நடை பெற்று வரும் ஒலிம்பியாட் தொடரில் பல்வேறு தவறான கருத்துக்கள் அதிகம் பரவி வருகிறது. ஓபன் பிரிவில் இந்தியா “பி” அணியில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா தோல்வியை சந்தித்தார். உடனே பலம் வாய்ந்த இந்திய அணி சொந்த மண்ணில் சொதப்பலாக விளையாடுகிறது என சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது மிகவும் தவறானது. விளை யாட்டுத்துறையில் அதிகம் அறியப் படாத (மல்யுத்தம் தவிர) அர்மேனியா நாடு ஓபன் பிரிவில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தில் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் அர்மேனியாவிற்கு இந்தியா, ரஷ்யா, நார்வே, அமெரிக்கா என அணிக்கு செஸ் என தனி பார்ம் எதுவும் கிடையாது. அர்மேனியா நாட்டு வீரர் - வீராங்கனைகளின் போட்டி நடைபெறும் போது வெளிப் படுத்தப்படும் கள செயல்பாடு மட்டுமே புள்ளிகளை குவித்து முதலிடத்தில் வைத்துள்ளது. அதே மாதிரி தான் இந்திய நட்சத்திரங்களும் கள நகர்த்தலில் ஏற்பட்ட சொதப்பலால் தான் தோல்வி கண்டனர் தவிர இதற்கு பார்ம் மற்றும் அசமந்தமான ஆட்டம் என சர்ச்சை கருத்தைக் கூற முடியாது. இன்னும் நாட்கள் உள்ளது. இந்திய நட்சத்திரங்கள்சாதிப்பார்கள்...
ஒடிடி தளத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா
செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி மிகவும் பிரம்மாண்ட அளவில் நிறைவு விழாவை நடத்த போட்டியை நடத்தும் தமிழ்நாடு ஏற்பாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிறைவு விழா நிகழ்ச்சியை ஒடிடி தளத்தில் வெளியிடவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.