games

img

விளையாட்டு...

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து  ஜாம்பியாவை புரட்டியெடுத்த ஸ்பெயின்

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது.  புதனன்று நடைபெற்ற “குரூப் சி” பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் -  ஜாம்பியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி முதல் 13 நிமிடங்களிலேயே 2 கோல்களை அடித்து அதிரடியை துவங்கியது. தொடர்ந்து 2-ஆம் பாதியிலும் கோல் மழை பொழிந்த ஸ்பெயின் அணி ஆட்டநேர முடிவில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை புரட்டியெடுத்தது.  முன்னதாக ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது (“குரூப் சி”).

இன்றைய ஆட்டங்கள்
அமெரிக்கா - நெதர்லாந்து
நேரம் : காலை 6:30 மணி 
போர்ச்சுக்கல் - வியட்நாம்
நேரம் : மதியம் 1:00 மணி
ஆஸ்திரேலியா - நைஜீரியா
நேரம் : மாலை 3:30 மணி
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஒடிடி)

ஆஷஸ் கடைசி டெஸ்ட் 
தொடரை சமன் செய்யுமா இங்கிலாந்து?

139 ஆண்டு பழமையான, பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.  மொத்தம் 5 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலை யில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் வியாழனன்றுதொடங்குகிறது.  தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணி மிக தீவிரமான பயிற்சியுடன் களமிறங்க உள்ளது. அதே போல ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. இரு அணிகளும் வெற்றிகளின் மீது குறியாக களமிறங்குவதால் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா
இடம்: கென்னிங்டன் ஒவல்,லண்டன்
நேரம் : மதியம் 3:30 மணி
சேனல்: சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ்(ஒடிடி)

மழை விளையாடுமா?

பொதுவாக கிரிக்கெட் உல கில் ஒரு போட்டி அல் லது தொடர் நடைபெறுவதாக இருந் தால் வீரர்களின் பட்டியல், மைதானம், அணியின் பலத்தை பற்றி முதலில் ஆராய்வார்கள். ஆனால் இங்கிலாந்து மண்ணில் போட்டி என்றால் முதலில் வானிலையைதான் ஆராய்வார்கள். காரணம் காலநிலை மாற்றத்தால் பெரிதாக பாதிக்கப்படும் பகுதியாக இங்கிலாந்து உள்ளது.  எப்பொழுது மழை வரும்? எப்பொ ழுது வெயில் அடிக்கும் என்பதை ஆராய தனியாக நாசா போன்று ஒரு ஆய்வு மையத்தை அங்கு அமைக்க வேண்டும் போல் உள்ளது. இந்த மாறுபட்ட வானிலையால் இங்கி லாந்து நாட்டில் கிரிக்கெட் போட்டியை நடத்த சுவாரஸ்யம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஏற்கெனவே இங்கிலாந்து நாட்டில் 2019 உலகக்கோப்பை மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே  போல சமீபத்தில் நிறைவு பெற்ற ஆஷஸ் தொடரின் 4-வது போட்டி பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது இங்கி லாந்து அணியின் வெற்றியை மழை காவு வாங்கிய நிலையில், 5-வது போட்டியும் மழையால் பாதிக்கப்பட உள்ளது. லண்டன் நகர வானிலை நில வரப்படி ஒருவாரத்திற்கு மழை பெய்ய  வாய்ப்புள்ளது. இதனால் கடைசி டெஸ்ட் சுவாரஸ்யமில்லாமல் அல்லது டிராவில் நிறைவடைந்து ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை  கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படு கிறது.

ஷார்ட்ஸ்

ஸ்்பெயின் ஹாக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இந்தியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கித் தொடரின் முதல் ஆட்டத்தில், ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. தொடர்ந்து பார்ம் பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் இந்தியாவின் பி.வி. சிந்து ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறினார். முதல் சுற்றில் சீன வீராங்கனை ஜாங் யிமானிடம் 12-21, 13-21 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார். நவராத்திரி கொண்டாட்டம் காரணமாக குஜராத்தில் நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஆட்டம் அக்டோபர் 15 தேதிக்கு பதிலாக அக்டோபர் 14 அன்று நடைபெறலாம் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

 

;