தமிழ் மொழிக்கு தொடர்ந்து அங்கீகாரம் அளிக்கும் விம்பிள்டன்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் மிக அதிக பரிசுத்தொகை கொண்ட தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. 146 ஆண்டுகாலம் பழமை யான, பாரம்பரியமிக்க இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாண்டு காலமாக தமிழ் மொழிக்கு தொடர்ந்து அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
“வாத்தி கம்மிங்”
டென்னிஸ் உலகின் ஜாம்பவானும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து நாட்டவருமான ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு (2022) விம்பிள்டன் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்த பொழுது, விம்பிள்டன் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கடந்த 2021 ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய “மாஸ்டர்” திரைப்படத்தின் “வாத்தி கம்மிங்” பாடலின் தொடக்க வரியை பதிவிட்டு வரவேற்பு அளித்தது.
தலைவா
அதே போல நடப்பாண்டிலும் விம்பிள்டன் நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் “தலைவா” என்ற தமிழ் பெயர் மூலம் அதே ரோஜர் பெடரருக்கு வரவேற்பு வழங்கியுள்ளது. உலகின் தலைசிறந்த விளையாட்டு தொடர்களில் ஒன்றான விம்பிள்டனில் தொடர்ந்து இரண்டு ஆண்டாக தமிழ் மொழியின் பெயர் புலத்தை வைத்து ரோஜர் பெடரருக்கு வரவேற்பு அளிப்பதன் மூலம் தமிழ் மொழிக்கு இங்கிலாந்து மண்ணில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தனிப்பட்ட, வேறொரு வழியில் புதுமையான அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
1. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் சிறப்பு பெயர் “தலைவா”
2. கடந்த 2013இல் பா.விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய “தலைவா”
3. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் சென்னை அணியின் கேப்டனுமான தோனிக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் வைத்துள்ள பட்டம் “தலைவா”
விம்பிள்டனில் இன்று...
- ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று ஆட்டங்கள்
- இரட்டையர் பிரிவுகளில் முதல் சுற்று ஆட்டங்கள்
- சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (தொலைக்காட்சி), ஹாட் ஸ்டார் (ஓடிடி)
டிஎன்பிஎல் : பிளே ஆப் சுற்றுகள்
குவாலிபையர் 2 முன்னேறுவது யார்?
மதுரை - திருநெல்வேலி இன்று பலப்பரீட்சை
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், சனியன்று பிளே ஆப் சுற்றின் 2-வது நிகழ்வான எலிமி னேட்டர் எனப்படும் வெளியேற்றுதல் சுற்றில் மதுரை - திருநெல்வேலி அணிகள் மோது கின்றன. எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2 ஆட்டத்தில் பங்கேற்கும். தோல்வி அடையும் அணி வெளியேறும் என்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.
மதுரை - திருநெல்வேலி
நேரம் : இரவு 7:15 மணி
இடம் : எஸ்சிஎப் மைதானம், சேலம்
சேலம் - வாழப்பாடி சாலையில், வாழப்பாடிக்கு அருகே உள்ளது
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
மழை : லேசான அளவில் வாய்ப்புள்ளது.
தில்லி
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக ரஞ்சித் சிங் கெய்க்வாட்
பணம் கொழிக்கும் விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட்டில் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் தேசிய அணியின் சம்பளம், ஐபிஎல் போன்ற டி-20 லீக் அணியின் சம்பளம், விளம்பரம், ஸ்பான்சர் பரிசு என ஆண்டுக்கு தோராயமாக ரூ.30 கோடிக்கு மேல் பணத்தை அள்ளுகிறார்கள். தற்போதைய புள்ளிவிவரங்களின் படி உலகின் மிக பணக்கார கிரிக்கெட் வீரராக சச்சின் தெண்டுல்கர் (ரூ.1110 கோடி) உள்ளார். தோனி (ரூ.1030 கோடி), கோலி (ரூ.1010 கோடி) ஆகியோர் முதல் இடங்களில் உள்ளனர். ஆனால் இந்த மூவரை பின்னுக்குத்தள்ளி இன்னொரு வீரர் ஒருவர் கிரிக்கெட் உலகின் பணக்கார வீரராக இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் பெயர் சமர்ஜித்சிங் ரஞ்சித் சிங் கெய்க்வாட் (56). பரோடா மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் ரஞ்சி டிராபியில் பரோடா அணிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். தந்தை சுபாங்கினிராஜா மறைவுக்கு பின் மகாராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்ட ரஞ்சித் சிங் ரூ.20 ஆயிரம் கோடி சொத்துகள் மூலம் நாட்டின் முக்கிய பணக்காரர்களில் ஒருவராகவும், கிரிக்கெட் உலகின் பணக்கார வீரர் என்ற விஷயம் தற்போதுதான் தெரிய வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமான லக்ஷ்மி விலாஸ் அரண்மனையின் உரிமையாளர், குஜராத்