ஆசியக்கோப்பை கிரிக்கெட் 2023
முதல் வெற்றியை ருசிக்குமா இந்தியா?
16-வது சீசன் ஆசியக் கோப்பை கிரிக்கெட் (ஒருநாள்) தொடர் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. தற் போது இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திங்களன்று நடைபெறும் குரூப் “ஏ” பிரிவின் 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது லீக் ஆட்டத்தில் நேபாளம் அணியை இந்திய அணி எளிதில் வீழ்த்தி ஆசியக்கோப்பையில் முதல் வெற்றி யை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இந்தியா-நேபாளம்
இடம் : பல்லேகெலே மைதானம், கண்டி, இலங்கை
நேரம் : மதியம் 3 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்ஸ்டார் (ஓடிடி - இலவசம்)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சுவிட்டோலினா அவுட்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் 143-வது சீசன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரு கிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள அதி ரடிக்கு பெயர் பெற்ற உக்ரைன் வீராங்கனையான எலினா சுவிட்டோலினா, தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெ ரிக்காவின் பெகுலாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேற, அதிர்ச்சி தோல்வியுடன் சுவிட்டோலினா வெளியேறினார். சீனாவின் ஜெங், துனிசியாவின் ஜபியூர், செக் குடியரசின் வென்டரசோவா ஆகியோர் சிக்கலின்றி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். வாவ்ரிங்கா அவுட் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் முன்னணி வீரரும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரு மான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, இத்தாலி நாட்டின் நட்சத்திர வீரரான சின்னரை எதிர்கொண்டார். இருவரின் அதிரடி ஆட்டத்தால் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்தது. இறுதியில் சின்னர் 6-3, 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி னார். 2016 அமெரிக்க ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா தொட ரை விட்டு வெளியேறினார்.ரஷ்யாவின் மெத்வதேவ், ஜெர் மனியின் ஜுவரேவ், ஆஸ்திரேலியவின் டீ மினார், ரஷ்யாவின் ரப்லேவ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ரொனால்டோ வரலாற்று சாதனை
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், போர்ச்சுக்கல் அணியின் கேப்ட னுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியா கிளப் அணியான அல் நாசர் அணிக்காக விளையாடி வரு கிறார். சவூதி அரேபியா கிளப் தொடரில் சனியன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அல் நாசர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அல் ஹாசம் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அல் நார் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலடித்தார். இந்த கோல் மூலம் கால்பந்து வரலாற்றில் 850 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டி வரலாறு படைத்தார் ரொனால்டோ.
தெரிந்து கொள்ளுங்கள் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து...
இங்கிலாந்து நாடு இல்லாமல் விளையாட்டு உலகம் கிடையாது. முக்கியமான அனைத்து விளையாட்டு பிரிவுகளிலும் இங்கிலாந்து நாடு காலங் காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒலிம்பிக் தொடர்களில் பிரிட்டன் என்ற பெயரிலும், கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, ரக்பி, கைப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, தடகளம் போன்ற உலகின் தலைசிறந்த விளையாட்டு பிரிவுகளில் இங்கி லாந்து என்ற பெயரிலும் அந்த நாட்டின் வீரர் - வீராங்கனைகள் கண்டிப்பாக இடம்பெற்று கலக்கு வார்கள். பங்கேற்பு மட்டுமல்லாமல் சாதனை, சாம்பியன் பட்டம் என மிரட்டி விட்டுதான் செல்வார்கள்.