இன்று கடைசி டெஸ்ட் போட்டி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் (பார்டர் - காவஸ்கர் டிராபி) விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழனன்று தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக இருப்பதால் அகமதாபாத் டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம் : காலை 9:30 மணி
இடம் : அகமதாபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார்
சிக்கல்
ஆஸ்திரேலியா
கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. டிரா செய்தால் கூட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றிவிடும்.
இந்தியா
இந்திய அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டும். வெற்றி பெற்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் இணைய முடியும்.
கேரள அணியின் கோரிக்கை நிராகரிப்பு பயிற்சியாளருக்கு குவியும் பாராட்டு
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் மார்ச் 3 அன்று நடைபெற்ற நாக் அவுட் ஆட்டத்தில் கேரளா - பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டத்தின் 90-வது நிமிடம் வரை இரு அணிகளும் கோலடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் 7-வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு ப்ரீ கிக்-கில் கோலடித்தது. முறையான அவ காசம் வழங்காமல், வீரர்கள் வரிசையாக நிற்பதற்கு முன்பு கோல் அடிக்கப்பட்டதாக கேரள வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்தனர். ஆனால் நடுவர் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த கேரள அணி யின் பயிற்சியாளர் இவான், அனைத்து வீரர்களையும் மைதானத்தை விட்டு வெளி யேறச் சொல்ல கேரள வீரர்கள் பெவிலியன் திரும்பினார்கள். ஆட்டம் முடிவடைவதற்கு முன்பே கேரள வீரர்கள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் நேரம் முடியும் வரை மீண்டும் அவர்கள் திரும்பாததால் 120 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் முடிந்த தாக நடுவர் அறிவித்த நிலையில், 1-0 என கேரள அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பெங்களூரு அணி. இந்நிலையில்,”விசில் அடிக்காமல் எவ்வாறு ப்ரீ கிக் கோலடிக்கப்பட்டது, நடுவர் எவ்வாறு கோலாக அனுமதித்தார், நடுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, மீண்டும் நாக் அவுட் ஆட்டம் விளையாட அனுமதிக்க வேண்டும் என கேரள அணி நிர்வாகம் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் புகாருடன் கோரிக்கை அளித்தது. கோரிக்கை நிராகரிப்பு விதிமுறைகள், நடுவரின் அறிக்கை களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. போட்டியின் விதிமுறையில் உள்ளது போல நடுவரின் முடிவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. நடுவரின் முடிவே இறுதியானது எனக் கூறி இந்திய கால்பந்து சம்மேளனம் அறிக்கையுடன் கேரள அணியின் கோரிக்கையைநிராகரித்தது.
கேரள அணியின் கோரிக்கை சரியானது
கால்பந்து விளையாட்டின் பிரி கிக் பிரிவில் வீரர்கள் வரிசை ஒழுங்குபடுத்திய பிறகு, கோல்கீப்பரின் நடவடிக்கையை ஆராய்ந்த பின்னரே நடுவர் விசில் அடிப்பார். விசில் சப்தம் கொடுத்த பின்னர்தான் பந்தை உதைக்க வேண்டும். ஆனால் பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி (இந்திய கேப்டன்) விசில் அடிக்கும் முன்னரே உதைத்தார். கேரள வீரர்கள், கோல் கீப்பர் இதனை கணிக்கவே இல்லை. விசில் அடிக்காமல் எப்படி கோலடிக்க முடியும் என்பதே கேரள அணியின் கோரிக்கை. இந்த கோரிக்கை சரியானதுதான். ஆனால் இந்திய கால்பந்து சம்மேளனம் நிராகரித்தது ஆச்சரியமாக உள்ளது.
கேரள நாயகனாக மாறுகிறார் பயிற்சியாளர் இவான்
நாக் அவுட் ஆட்ட த்தில் பயிற்சி யாளர் இவானின் (செர்பியா) அதிரடி முடி வால்தான் கேரளா அணி போட்டியின் போதே வெளிநடப்பு செய்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கேரளா ரசிகர்கள் தங்கள் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடிய வில்லையே என்ற சோகத்தை மறந்து, பயிற்சியாளர் இவானின் அதிரடியை கொண்டாடி அவரை கேரள நாயகன் லெவலில் விட்டனர்.