ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பாரம்பரியமிக்க ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் புதனன்று தொடங் கியது. சாம்பல் யுத்தம் என அழைக்கப்படும் முக்கியமான டெஸ்ட் தொடராக இருப்ப தால் கிரிக்கெட் உலகம் இந்த தொடரை அதிகம் எதிர்பார்க்கும். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரான இந்த ஆஷஸ் தொடர் நடைபெறும் சில மாதங்களுக்கு முன்னரே மைதான இடங்கள் வழக்கம் போல அறிவிக்கப்படும். ஆனால் நடப்பாண்டு சீசனில் 5-ஆம் டெஸ்ட் போட்டி நடைபெறும் மைதானமான பெர்த் மைதானம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மற்றும் இதர பிரச்சனைகள் காரண மாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் அறி வித்தது. ஆனால் இதுவரை 5-ஆம் டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
மைதான நகரம்
முதல் டெஸ்ட் : பிரிஸ்பேன்
2-வது டெஸ்ட் : அடிலெய்டு
3-வது டெஸ்ட் : மெல்போர்ன்
4-வது டெஸ்ட் : சிட்னி
5-வது டெஸ்ட் : அறிவிப்பு இல்லை