தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் என இரண்டு விதமான போட்டிகளைகொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான டெஸ்ட் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்கியா காயம் காரணமாக விலகியுள்ளார். 28 வயதாகும் நோர்கியா மிரட்டல் வேகத்தில் பந்துவீசக்கூடியவர். இவரது பந்தை கணிப்பது சற்று கடினமான விஷயம் தான். சமீபத்தில் நிறை வடைந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளார்.