games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2022

நெதர்லாந்து அபாரம்

5-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து  அணி, நமீபியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் நெதர்லாந்து அணி “குரூப் ஏ” பிரிவில் 4 புள்ளிகளுடன் (2 ஆட்டம் - 2 வெற்றி)  முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது.  (ஸ்கோர் : நமீபியா (121/6) (20) - நெதர்லாந்து 122/5 (19.3))

இன்றைய தகுதி சுற்று ஆட்டங்கள்

ஸ்காட்லாந்து - அயர்லாந்து
நேரம் : காலை 9:30 மணி
மேற்கு இந்தியத் தீவுகள் - ஜிம்பாப்வே
நேரம் : மதியம் 1:30 மணி
இரண்டு ஆட்டங்களும் : பெல்லேரீவே, ஹோபர்ட்

மழை வருமா? புதனன்று நிலவரப்படி  ஹோபர்ட் நகரம் மேக மூட்டத்துடன் காணப்படும். 40% மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இனி பேட்டிங் செய்வது கடினம்?

கருமையான மேகக்கூட்டம், அடிக்கடி மிரட்டும் மழை என ஆஸ்திரேலிய வானிலை நம்மூர்  மணிப்பூர் போல மாறி வருகிறது. எப்பொழுதும் மழை பெய்யும், எப்பொழுது நிற்கும், என்ன நடக் கிறது என புரியாமல் ஆஸ்திரே லியர்கள் விழித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அங்கு விளை யாட்டு உலகமே அதிகம் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஆடு களங்கள் உயிரோட்டமானது. இதில் மந்தமான வானிலை மற்றும் திடீர் மழையால் குளிர் வேறு அதிகம் வாட்டுகிறது. இதனால் ஆடுகளங் கள் கூடுதலான அளவு உயிரோட்ட மாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது தகுதிச் சுற்று நடை பெற்று வரும் கீலாங், ஹோபர்ட் மைதானங்கள் தன்னுடைய நிலையில் இருந்து மாறியுள்ளது. லேசாக பவுன்சர் மாற்றம் தெரிகிறது. இதே வானிலை தொடர்ந்தால் உலகக்கோப்பை நடைபெறும் அனைத்து ஆடுகளங்களிலும் பவுன்சர் படுமோசமாக எகிறும். மேலும் பேட்டிங் செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். வானிலை - மைதானம் பற்றிய விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்க யாராலும் இய லாது என்பதால் இந்த தொடர் எவ்வ ளவு சுவாரஸ்யமாக நகரும் என்ப தை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

;