games

img

டி-20 உலகக்கோப்பை - ஸ்பெஷல் நியூசிலாந்து அணி எப்படி?

கிரிக்கெட் உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற நியூசிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை விட டி-20 போட்டிகளில் மிக நன்றாக விளையாடும். காரணம் அந்நாட்டு கிரிக்கெட் மைதானங்கள் மிக சிறிய அளவில் இருப்பதால் டி-20 விளையாட்டின் முக்கிய கருப்பொருளான அதிரடி திறனை அவர்கள் பழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தான் டி-20 கிரிக்கெட் உலகில் முதன்மையான அணியாக கம்பீரமாக நியூசிலாந்து வலம் வருகிறது.  இத்தகைய சிறப்புகள் இருந்தும் இதுவரை டி-20 உலகக்கோப்பையை நியூசிலாந்து அணி வென்றதில்லை. கடந்த சீசனில் (2021 - துபாய்) ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிவரை போராடி கோப்பையை பறிகொடுத்தது. இந்த முறையும் அதே போல நடக்கக்கூடாது என்பதற்காக சீரிய ஆய்வுடன் வீரர்களை தேர்வு செய்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.  பேட்டிங் பிரிவில் 10 பேர் (ஆல்ரவுண்டர் சேர்த்து), பந்துவீச்சில் 9 பேர் (ஆல்ரவுண்டர் சேர்த்து) என மிகவும் பலமான வகையில் 8-வது சீசன் உலகக்கோப்பையில் களமிறங்க உள்ள நியூசிலாந்து அணி, பேட்டிங், பந்துவீச்சு பிரிவு பிளஸ் பாயிண்டுகளை பெற்றாலும் ஆல்ரவுண்டர் பிரிவு மைனஸ் பாயிண்டுகளை அதிகமாக பெற்றுள்ளது. காரணம் தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்களில் ஜிம்மி நீசம் மட்டுமே சூப்பர் பார்ம் மற்றும் அதிகளவு சர்வதேச அனுபவம் உடையவர். மற்றவர்கள் குறைந்த அனுபவம் கொண்டவர்கள். மற்றபடி அணியில் பெரியளவில் குறைகள் எதுவும் கிடையாது.  ஆஸ்திரேலிய மைதானங்கள் நன்கு பழக்கப்பட்ட உள்ளூர் மைதானம் போன்றது என்பதால் நியூசிலாந்து வீரர்கள் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கோப்பையை வெல்வார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

வீரர்கள் விபரம்

கேப்டன் : கேன் வில்லியம்சன் (பேட்டிங்)
பேட்டிங் : மார்ட்டின் கப்டில்
விக்கெட் கீப்பர் : க்ளென் பிலிப்ஸ், டெவோன் கான்வே, ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல்
ஆல்ரவுண்டர் : ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், மார்க் சாப்மேன், டேரில் மிட்சல்
பந்துவீச்சு : டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட், ஆடம் மில்னே
(மாற்று வீரர்களை அறிவிக்கவில்லை)

;